244 தின் நிழல் அவள் முகத்தில் படிந்திருந்தது. அவளிடம் எனக்கு இரக்கம் ஏற்பட்டது. அவள் தந்தை பட்டாளத்தில் வேலை செய்துகொண்டிருந்தவராம். பாவம்! இறந்து விட்டார். அவளுக்குத் துணை வேறு ஒருவரும் இல்லை. அனாதையான அவள் தனியாகத் தாய் நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அவளிடம் பேச்சுக் கொடுத்து இவற்றைத் தெரிந்து கொண்டேன். கொண்டிருந்தது. என்ற அன்று இரவு, நிலவு காய்ந்து எல்லோரும் நல்ல உறக்கத்திலிருந்தார்கள். எனக்கும் தூக்கம் வராததால் நான் எழுந்து மேல்தளத்திற்குச் சென்றேன்.தளத்தின் ஒரு ஓரத்தில் அவள் நிற்கக்கண்டேன். கடலை உற்று நோக்கிக்கொண்டு அவள் நின்றிருந்தாள். துன்பம் தாளாமல் ஒருவேளை தற்கொலை செய்துகொள்ள நிற்கிறாளோ என்று எண்ணினேன். திக்கென்றது! அவள் அருகே சென்று பேச்சுக் கொடுத்தேன். பிறந்த பொன்னாட்டில் பெற்றவர்களைப் பறிகொடுத்துவிட்டு, அநாதையாகத் தாய்நாட்டிற்குள் நுழைகிறோம்' வருத்தத்தால், அவள் அழுதுகொண்டு நின்றிருந்தாள். "அநாதை ஒன்று எவருமே கிடையாது; எல்லோரும் கடவுளுடையை மக்கள்; படைத்தவன் காப்பான்; ஆதலால் உள்ளம் தளர்தல் கூடாது. அவனிடம் பக்திகொண்டு அவன் பாதங்களை வணங்குதலே மனத்திற்கு அமைதிதரும்" என்று அவளுக்கு ஆறுதல் கூறினேன். பிறகு எங்கள் மடத்தைப் பற்றியும், அதன் கோட்பாடுகளையும் கூறி, அவள் விரும் பினால் அதில் சேவை செய்யலாம் என்றும், அவள் போன்று பலர் அங்கிருப்பதாகவும் கூறினேன். அதற்கவள் இசைந் தாள். அதன்படி அவளை என்னுடன் அழைத்துச்சென்று மடத்தில் சேர்த்தேன். மதகுருவும் அவளைச் சேர்த்துக் கொண்டார். அந்த மடத்தில் உள்ள பல வேலைகளையும் அங்குள்ளவர்கள் பகிர்ந்து செய்வது வழக்கம். மதகுருவுக்குப் பணிவிடைசெய்ய, ஒரு நாளைக்கு ஒருவர் என்று முறைப் படி நடந்து வந்தது. வந்த புதிதில் வந்த புதிதில் சாரு உற்சாகத்துட னிருந்தாள். சிறிது நாட்களுக்கெல்லாம் அது மறைந்து
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/246
Appearance