உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைத்துக் 245 விட்டது. அவள் மெளனமாக வெகுநேரம் உட்கார்ந்திருப் பாள். பரமனைப்பற்றிய தியானத்தில் ஆழ்ந்திருப்பதாக நான் நினைத்துக் கொண்டேன். அடிக்கடி அவளைச் சந்தித்து, 'மடத்துக்கு சேவைசெய்து மதகுரு சொல்கிறபடி நடப்பதுதான் மனஅமைதி பெறும்வழி; அதுதான் சிறந்த நிலை; இந்த உலகத்தின் இன்பம் மாயை' என்று அவளுக்கு உபதேசித்து வந்தேன். நான் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அவள் முகத்திலிருந்து சோகம் மறைந்துவிடும். அவள் ஏதோ சொல்ல வாயெடுப்பாள். ஆனால் நிறுத்திக்கொள் வாள். ஏதாவது சந்தேகமிருந்தால் கேட்கும்படி கூறியும் அவள் கூறமாட்டாள். மறுபடி, மறுநாள் பார்க்கும்பொழுது அவள் முகத்தில் சோகம் கப்பி நிற்கும். என் மனது இதனால் கலக்கமுறும். ஒரு நாள் அவள் மிகவும் வாட்ட மாகக் காணப்பட்டாள். அன்று அவளிடம் வழக்கப்படி என் போதனையை ஆரம்பித்தேன். பேச்சின் முடிவில், மறுநாள் குருவுக்குப் பணிவிடை செய்யும் வேலை அவளுடைய தென்றும், பயமாக இருப்பதாகவும் தெரிவித்தாள். 'பக்தர் களுக்கு பணிவிடை செய்வது சிறந்த சேவை; அதிலும் மதகுரு, மகானுக்கு செய்வது நாம் பெற்ற பேறு. அவர் மிகவும் நல்லவர். நமக்கெல்லாம் ஞானக்கண்ணை அளித்த மகான். அவரோடு, பூசை செய்வதில் உதவி செய்வதற்கு நாம் கொடுத்து வைத்திருக்கவேண்டு' மென்று கூறினேன். அவள் பேசாமலிருந்தாள். மறுநாள், நான் கங்கையில் குளித்துவிட்டு, பஜனையில் கலந்துகொண்டு, கோவிலுக்குச் சென்றுவிட்டு, மடத்திற்கு வந்தேன். அந்த வருடம் நடத்தவேண்டிய விழாவைப்பற்றிக் குருவிடம் கலந்து பேசவேண்டியிருந்தது. பூசை முடிந்ததும் தியானத்தில் ஆழ்ந்து விடுவார். ஆதலால் விரைவாக அவரைக் காணச் சென்றேன். அவருடன் எப்பொழுதும் இருக்கும் ஒரு இளம் சாமியார் வாயிற்படியில் உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அவனைத் தட்டிக் கேட்டதற்கு, தூக்கத்தோடு.அவர். பூசை செய்துகொண்டிருப்பதாகத்