846 தெரிவித்தான். உள்ளே நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிடவைத்தது. மதகுரு என்று நான் போற்றிய அந்த மகாபாவி, சாருவின் கைகளைப்பிடித்துக்கொண்டு அவளைத் தன் காமவெறிக்கு இணங்கும்படி துன்புறுத்திக் கொண் டிருந்தான். அவனுடைய பிடியில் சிக்கி, அவள் தவித்துக் கொண்டிருந்தாள். இதைக் கண்டதும் ஆயிரம் தேள் கொட் டியது போலிருந்தது எனக்கு. என் நரம்புகள் துடித்தன. எனக்கிருந்த ஆத்திரத்தில் பேசமுடியவில்லை. அவனைக் தொலை செய்துவிட வேண்டுமென்று நினைத்தேன். அவனை நெருங்கினேன். யும் உபயோகித்து, எங்களை அழித்துவிடுவதாகப் பயமுறுத் தினான். அதற்காகப் பயப்படாமல் நான் அவன்மீது பாய்ந்த பொழுது, சாரு வந்து என் கையைப் பிடித்துக்கொண்டாள். என் உடல் முழுவதும் மின்சார ஓட்டம் ஏற்பட்டது. அவளுடைய கண்கள், 'எனக்கு வாழ்வுதா' என்று கெஞ்சின. அவளைக் கப்பலில் சந்தித்து நம்பிக்கை ஊட்டியது நினைவு வந்தது. என் அவன் தன் அந்தஸ்து முழுவதை காட்ட உள்ளத்தில் ஒரு எண்ணம் பளிச்சிட்டது. இவனை ஒழிப்பதால் பயனில்லை. இந்த இந்த மடத்தையே ஒழித்துக் கட்டவேண்டும்; இதை உலகுக்குக் வேண்டும் என்று நினைத்து, நான் சாருவின் கையைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துக்கொண்டு, மடத்தைவிட்டு வெளியேறினேன். ஏற்கனவே மெலிந்திருந்த அவளுக்கு அன்று ஏற்பட்ட அதிர்ச்சியினால் காய்ச்சல் வந்துவிட்டது. நான் அவளை மணந்து கொள்வதாக வாக்களித்தேன். அதைக்கேட்டு அவள் மகிழ்ச்சியடைந்தாள். அவள் உடல் நலமடைந்ததும், நாங்கள் இருவரும் இல்லறம் நடத்துவதாக இருந்தோம். ஆனால் அவள் தேறவில்லை. தேய்ந்து கொண்டே வந்தாள். ஒரு வாரம் கழித்து, ஒருநாள் இரவு அவள் எண்னைவிட்டுப் பிரிந்துவிட்டாள். என் மனதும் அதோடு பேதலித்துவிட்டது. மடத்தை ஒழித்துக்கட்ட வேண்டுமென்பதற்கு நான் கூறியவற்றை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னைப் பைத்தியக்காரனென்று ஏசினர். அதன்பிறகு நான் சென்னை வந்தேன். ஒரு நாள்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/248
Appearance