உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 செய்தித்தாளில் சிவஞான சாமியார் என்பவர், சூதாடும் இடத்தில் குடிமயக்கத்திலிருந்து பிடிப்பட்டார் என்று இருந்தது. அதைக் கண்டதும், எனக்கு உலகத்திலிருந்த நம்பிக்கையே போய்விட்டது. நான் சாருவை அநியாய மாகக் கொன்றுவிட்டேன். எப்போழுதும் என் நினைவில் அவள் இருக்கிறாள். ஒவ்வொரு இரவும் நான் அவளைச் சந்திக்கிறேன். அவள் எனக்காக அறையில் காத்திருப்பாள். தம்பி! அதோ அந்த ஹோட்டல் மாடி மூன்றாம் எண் அறை விளக்கு எரி கிறது பார். காத்திருப்பாள். வருகிறேன்" என்றார். அவர் போய்க்கொண்டே இருந்தார். இப்பொழுது சிறிது இருட்டி விட்டது.எங்கும் விளக்குகள் எரிந்தன. நான் என் வீட்டிற்கு நடந்தேன்.மறுநாள் காலை தினத்தாளில், "உலகம் பத்திரிகை எழுத்தாளர் தினகரன், நேற்றிரவு திடீரென்று மரணமடைந்தார் என்று செய்தி வெளியாகி இருந்தது.