2. தமிழ் இசையின் மேன்மை ய தமிழகத்திலே உள்ள மக்கள் தங்களுடைய தாய்மொழி யாகிய தமிழிலே தமிழ் இசையைப் பெற விரும்புகிறார்கள். இதில் என்ன தவறு? தங்களுடைய மொழியிலே தங்களுடைய இசையைக் கேட்கவேண்டும், இசைப் பாடல்களைப் பாட வேண்டும் என்ற முயற்சி ஒரு ஆக்க முயற்சியே தவிர, வேறு ஒரு மொழிக்கு எப்படி எதிர்ப்பு ஆகும்? அந்தந்த மொழி வாழ் கின்ற இடத்தில் அந்தந்த மொழிக்கு உரியவர்கள் அந்தந்த மொழிக்கு உரிய தன்மையைப் பாராட்டுவதில் தவறில்லை. இது தமிழ்நாடு. தாய்மொழி தமிழ். இங்கே இருக் கின்றவர்கள் தமிழர்கள். தம்முடைய தாய் மொழி யாகிய தமிழிலே இசையைப் பெற விரும்புகிறார்கள். இதில் என்ன தவறு? ஆகவேதான் தாய்மொழியிலேயே தமிழ்ப் பாடல்களைத் தரவேண்டும் என்று கேட்கவேண்டிய ஒரு இரங்கத்தக்க நிலையிலே தமிழகம் இருந்துவந்ததை மாற்றி,மறுபடியும் தமிழ் வெள்ளம் - இசைவெள்ளம் நாடெங் கும் பரவுதற்குப் பெருந்துணை புரிந்த பெருமை ராஜா சர். அண்ணாமலை செட்டியார் அவர்களையும், சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்றவர்களையும் மிகச் சாரும். அவர்கள் ஊக்குவித்த இந்த இயக்கம் இவ்வளவு பரவலான அளவிற்கு நல்லதொரு வெற்றியைப் பெற்றுவருகிறது என்பதனை மிக நன்றாக நாம் காண்கிறோம். அந்த வகையிலே, தமிழ் இசையானது தொன்மையான ஒன்று என்பது மட்டுமல்லாமல், தமிழ் இசை மிகச்சிறந்தது என்பது மட்டுமல்லாமல், இயற்கையோடு இயைந்து வளர்ந்த ஒன்றாக
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/25
Appearance