33. அடிகளும் அடிகளும் ஐந்து ரூபாயும் நான், பட்டுக்கோட்டையில், மாவட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்றுகொண்டிந்த காலை, நானும் எனது இளவல் இரா. செழியனும், மற்றுஞ் சில தமிழார்வங் கொண்ட மாணவர்களும் சேர்ந்து "திருவள்ளுவர் இளைஞர் தமிழ்க் கழகம்" என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன்மூலம் சொற் பயிற்சிக் கூட்டம்,பொதுக்கூட்டம் ஆகியவைகள் நடத்தி வந்தோம். 1937-38ஆம் ஆண்டில் நான் பள்ளி இறுதி வகுப்பில் பயின்று கொண்டிருந்தபோது, இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழகத்தில் மிக வலுப்பெற்றிருந்தது. இந்தி எதிர்ப்பு இயக்கத்தில், "திருவள்ளுவர் இளைஞர் தமிழ்க் கழகம்" மிகவும் ஈடுபட்டுத் தீவிரமாகப் பணியாற்றிவந்தது. தமிழ்க் கழகத்தில் மாணவர்கள் மட்டும் பங்கு கொண்டிருந்ததால், மிசுக் குறைவான பொருளாதார வசதியைக் கொண் டிருந்தது. மாணவர்கள் ஒவ்வொருவரும் திங்கள் ஒன்றுக்கு ஒரு அணா விதம் உறுப்பினர் கட்டணமாகச் செலுத்திய வகைகளில், ரூபாய் பன்னிரண்டு சேர்த்து வைத்திருந்தோம். அப்பொழுது ஈழத்து அடிகள் கருவூர் அறிவுதயக் கழக ஆசிரியர் ; ஈழத்துச் சிவானந்த அடிகள் என்றபெயரில் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை முன்னின்று நடத்திவந்தார்கள். எங்கள் தமிழ்க் கழகம் அவரைப் பட்டுக்கோட்டைக்கு வரவழைத்துப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசவைக்க வேண்டும் என்று முடிவு செய்தது. நான் தமிழ்க் கழகத்தின்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/250
தோற்றம்