உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 செயலாளர் என்ற முறையில், பட்டுக்கோட்டைக்கு வரும்படி தோழர் ஈழத்து அடிகளுக்கு எழுதிக் கேட்டிருந் தேன். அவரும் வர இசைவு தந்திருந்தார். நாங்கள் ஏதும் அறியாத இளம் மாணவர்களாக இருந்ததால், தோழர் ஈழத்து அடிகள் கரூரிலிருந்து பட்டுக் கோட்டைக்கு வருவதற்கு ரூபாய் ஐந்து போதும் என்று நினைத்துக் கொண்டு, அந்தத் தொகையை அவருக்கு அனுப்பி வைத்திருந்தோம். அவர் குறிப்பிட்ட நாளில் வந்து சேர்ந்து விடுவார் என்றும் நினைத்துக்கொண்டோம். மேற்கொண்டு அவருக்கு நாங்கள் ஏதும் எழுதவில்லை. தோழர் ஈழத்து அடிகள் அவர்கள். நாங்கள் அனுப்பி வைத்த ரூபாய் போதாது என்று கருதினாரோ, அல்லது மாநாட்டிற்குப் போகவேண்டியது இன்றியமையாதது என்று கருதினாரோ, எது என்று தெரியவில்லை. அவர் நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்கு அதேநாளில் போகப்போவ தாகவும், பட்டுக்கோட்டைக்கு வருவதற்கில்லை என்றும் எங்களுக்குக் கூட்டத்தன்று வந்து சேரும்படி அஞ்சல் எழுதி விட்டார். மாணவர்களாகிய எங்களுக்குத் தோழர் ஈழத்து அடிகள்! மீது அடங்காத சினம் பொங்கிற்று. பிறகு தோழர் கே.வி. அழகிரிசாமி அவர்களை வைத்துக் கொண்டு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினோம். அடிகள் அறியாப் பருவத்தினராகிய நாங்கள், தோழர் ஈழத்து அனுப்பிவைத்த அவர்களிடமிருந்து, அவருக்கு ரூபாய் ஐந்தையும் வாங்கிவிடவேண்டும் என்று முயற்சி எடுத்தோம். சுமார் இருபது முடங்கல்கள் பணத்தைத் திருப்பி அனுப்பும்படி அவருக்கு வற்புறுத்திக் கண்டித்தெல் லாம் எழுதினோம். அவர் ஐந்து ரூபாயைத் திருப்பி அனுப்புவதைப்பற்றி ஏதும் குறிப்பிடாமல்,"நாராயண .-16