இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
250 (அப்பொழுது எனக்கிருந்த பெயர்) நன் மாணவ! நலம்! தங்கள் மடல் வரப்பெற்றேன். நான் "இந்தி பொது மொழியா? தமிழ் பொது மொழியா? என்ற நூலை இலவசமாக வெளியிட்டுள்ளேன். அதற்கு நன்கொடை திரட்டி அனுப்ப வேண்டுகிறேன்" என்னும் கருத்துப்பட அவர் எழுதுவார். அந்த ஐந்து ரூபாயையும் திருப்பி அனுப்பிவைத்தால், பிறகு நிதி திரட்டி அனுப்புகிறோம்' என்று நாங்கள் அவருக்கு முடங்கல் எழுதுவோம். தோழர் ஈழத்து அடிகள் ஆற்றிவந்த தொண்டின் சிறப்பை அறியாமல், அவரிடம் முடங்கல்மூலம் சண்டையிட்டு வந்தோம். அவர் இன்னமும், அந்த ஐந்து ரூபாயைக் கொடுக்க வில்லை!