34. வெற்றுத் தோட்டா! பட்டுக்கோட்டையில் தோழர் கே.வி. அழகிரிசாமிர அவர்கள், சுயமரியாதை இயக்கக் கருத்துக்களை மிகத்தீவி மாகப் பரப்பிவந்தார். தொடக்க நாட்களில் அவருக்குப் படு எதிரியாக இருந்து அவருக்குப் பல தொல்லைகள் கொடுத்து வந்தவர், காலஞ்சென்ற தோழர் வி. நாடிமுத்துப்பிள்ளை ஆவார். தோழர் வி.நாடிமுத்துப்பிள்ளை அவர்கள் பெரும் பணக்காரர். அவரிடம் பணபலம், படைபலம் ஏராளமாக இருந்தன. வறுமையிலும், ஏழ்மையிலும் உழன்ற தோழர் அழகிரிசாமி அவர்களுக்கு அவர் எல்லாவிதத் தொல்லைகளை யும் கொடுத்து வந்தார். தோழர் அழகிரிசாமி அவர்கள் அவற்றையெல்லாம் சிறிதுகூடப் பொருட்படுத்தாமல். அஞ்சா நெஞ்சத்துடன், தம் நாவன்மையால் இளஞைர் பட்டாளத்தைத் திரட்டித் தம் பக்கம் வைத்துக்கொண்டு, அரும்பணி ஆற்றிவந்தார். தோழர் அழகிரிசாமி அவர்களின் சொல்லுக்குச் சொல், எழுத்துக்கு எழுத்து, வாதத்திற்கு வாதம் நேரியமுறையில் திராக எடுத்துவைக்க முடியாத தோழர் நாடிமுத்துப் பிள்ளை அவர்கள், சில்லரை ஆட்களை ஏவிவிட்டுத் தோழர் அழகிரிசாமியைப் பொதுக்கூட்டத்தின் மூலமும், துண்டு அறிக்கைகள் மூலமும், இழித்தும் பழித்தும் கூறச் செய்து வந்தார். ஒருமுறை தோழர் அழகிரிசாமியைப் பற்றி இழி வாசத் தாக்கும் முறையில் தண்டு அறிக்கை ஒன்று தோழர்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/253
Appearance