252 நாடிமுத்துப்பிள்ளை அவர்களால் அடிக்கப்பட்டது. அந்தத் துண்டு அறிக்கை அச்சியற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, ஒரு அறிக்கைத்தாள் தோழர் அழகிரிசாமி அவர் கள் கைக்குக் கிட்டியது. அன்று தோழர் அழகிரிசாமி அவர் களின் பொதுக்கூட்டம் ஒன்றும் இருந்தது. தோழர் நாடிமுத்துப் பிள்ளை துண்டு அறிக்கைகளை வெளியிடு வதற்கு முன்பே, தோழர் அழகிரிசாமி தம்மிடம் அகப்பட்ட அந்த அறிக்கையை எடுத்துக்கொண்டு பொதுக்கூட்டத் திற்கு வந்தார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, "நாளை தோழர் நாடிமுத்து அவர்களால் வெளியிடப்படப்போகிற என்னைப்பற்றிய அறிக்கையை நானே இன்று உங்களிடம் படித்துக் காண்பிக்கிறேன்" என்று சொல்லிப் படித்துக் காட்டினார். அதில் அவரைப்பற்றி அவரைப்பற்றி இழித்துக் கூறப்பட் டிருந்த வகைகளிலே, "அழகிரிசாமி ஒரு வெற்றுத் தோட்டா" என்பதும் ஒரு சொற்றொடராகும். இழிவாகக் கூறியவர்களுக்கு இழிவான முறையிலேயே பதில் கொடுக்கவேண்டும்' என்று சற்று ஆத்திரங்கொண்ட தோழர் அழகிரிசாமி,"என்னை ஒரு வெற்றுத் தோட்டா என்று சொல்லி தோழர் நாடிமுத்து இழித்துக் கூறியுள்ளார். எனக்கு ஒரு மனைவியும் மூன்று மக்களும் உண்டு. தோழர் நாடிமுத்து அவர்களுக்கு மூன்று மனைவியர் உண்டு; ஆனால் ஒரு பிள்ளைகூட இல்லை. இப்பொழுது அவர் கூறட்டும் யார் வெற்றுத் தோட்டா என்று?” என்றார், இதைக் கேட்டவுடன், கூட்டத்தில் பெருத்த கையொலியும், ஏளனச் சிரிப்பொலியும் தொடர்ந்து சில வினாடிகள் எழுந்தன. இந்தப் பேச்சைக் கேட்டறிந்த தோழர் நாடிமுத்துப் பிள்ளை அவர்கள் வெட்கப்பட்டு, அந்தத் துண்டு அறிக்கைகளை வெளிப்படுத்தாமலேயே இருந்துவிட்டார். அப்பொழுது அவர் மூன்று மனைவிமார்களைக் கொண் டிருந்தார்; ஆனால், குழந்தை ஏதும் இல்லாமலிருந்தார்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/254
Appearance