உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 "இருக்கிறது! வேண்டுமா?" என்று கேட்டார் தோழர் அன்பழகன் "ஆமாம்! ஒன்று கொடுங்கள்!" என்றார் அவர். 'குடிஅரசு' வாங்குகிற அளவுக்கு ஒரு மாணவர் வந்திருக் கிறாரென்பது, எனக்கும் தோழர் அன்பழகன் அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்படுத்தியது. இயக்க மாணவர்கள் மிகவாகத் தோன்றாதிருந்த அந்தக் காலத்தில், இயக்க மாணவர் எவரேனும் ஒருவரைக் கண்டுவிட்டால், அவர் எங்களுக்கு மலைபோல் தென்படுவார். உடனே அவரைப் பற்றிய விவரம் அறியவேண்டும் என்ற ஆவல் எங்களுக்கு ஏற்பட்டது. "நீங்கள் யார், எந்த ஊர், பெயரென்ன, பெயரென்ன, இதற்கு முன் எங்கு பயின்றீர்கள், இயக்கப்பற்று நீண்ட நாட்களாக உங்களுக்கு உண்டோ?" என்று கேட்டேன். " "நான் பல்கலைக் கழகத்தில் முதல் வகுப்பில் பயில வந்திருக்கிறேன். ஊர் சங்கொலிக் குப்பம். என் பெயர் தண்டபாணி. கடலூரில் படித்தேன். இந்தி எதிர்ப்புக் காலத்திலிருந்து இயக்க ஆர்வம் உண்டு." என்றார் அவர். இப்படிப்பட்ட முறையில் அறிமுகம் முறையில் அறிமுகம் ஆன தோழர் தண்டபாணி அவர்கள்தாம், பிற்பாடு தோழர் இரா. இளம்வழுதியாகக் காட்சிதந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், இயக்கத்தை மாணவர்களிடையே பரவச்செய்ததில் தோழர் இளம்வழுதி அவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. திராவிட மாணவர் இயக்கத்தைக் கட்டுக் கோப்போடும், அமைப்போடும் வளர்ப்பதில் அவர் தனி ஆர்வங் காட்டிவந்தார். அவர் அண்ணாமலை நகரில் எப்பொழுதும் ஐந்தாறு மாணவர்கள் பின்தொடர வட்டமிட்டுக் கொண்டிருப்பார். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண் டிருந்த ஐந்தாறு மாணவர்களை மாணவர் இயக்கத்தில்