இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உறுப்பினராக்கி, 255 அவர்களை 1945 இல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டிற்கும் அழைத்துக் கொண்டு வந்தார். அவர் பல்கலைக் கழகத்தின் பல்வேறு சங்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்ததோடு, உணவு விடுதி நிருவாகத் திலும் பங்குகொண்டு திறம்படச் செயலாற்றி வந்தார். அவர் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளாக நூல்கள், பதக்கங்கள், கோப்பைகள் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். தோழர் இளம்வழுதி அவர்கள் எதையும் திட்டம் போட்டு முறைப்படி ஒழுங்காகச் செய்து முடிக்கும் திறம் படைத்தவர். கழகக் கொடி பறக்க முடியாதிருந்த அண்ணாமலை நகரில், அதனைப் பறக்கவிட்ட முயற்சியில் தோழர் இளம்வழுதி அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் அறிஞர் அண்ணா அவர்களால், 'பிளாக் பிரின்ஸ்' 'கார்நிறக் கோன்' என்று அன்போடு இளம்வழுதி அழைக்கப் படுவார்.