36. "அவரா நீங்கள்?" றுவயதிலிருந்தே தாடியோடு கூடிய தோற்றப் பொலிவு என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்திருந்தது. கவர்ச்சிதரும் அழகான தாடியோடு கூடிய அறிவியல் அறிஞர்கள், தத்துவ அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள் ஆகியவர்களை நேரில் காணும்போதும் சரி, அவர்களின் எழில்மிக்க படங்களை ஏடுகளில் காணும் போதும் சரி, அவர்களை உவகையோடு உற்றுக்காண்பதில் எனக்குத் தனிவிருப்பம் ஏற்பட்டிருந்தது. அந்த விருப்பம் என்னுள்ளத்தில் வேணவாவாக அரும்பி மலரத் தொடங் கிற்று. உ நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மூன்றாம் ஆனர்சு வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, நாமும் தாடிவைத்துக்கொண்டால் என்ன என்ற எண்ணம் காய்த்துக் கனியத் தொடங்கிற்று. துணிந்து தாடி வளர்க்கத் துவங்கினேன். நான்காவது ஆனர்சு வகுப்பின் முதல் பருவம் முடியும் காலம் வரையில் தாடி வைத்திருந்தேன். செப்டம்பர் திங்கள் விடுமுறை நாட்களைக் கழிப்பதற்குச் சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். உற்றார் உறவினர் "தாடி வயதான தோற்றத்தைத் தருகிறது; எனவே அதனை எடுத்துவிடு" என்று வற்புறுத்தினார்கள். நானும் இணங்கி எடுத்துவிட்டேன். பின்னர் நானும் எனது மைத்துனரும் பெரியார் அவர்களைப் பார்க்க ஈரோடு சென்றிருந்தோம். அப்போது தோழர் ஈ. ஈ.வெ.கி. வெ.கி.சம்பத் அவர்கள், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/258
Appearance