உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருந்தார். 257 விடுமுறைக்காக வந்திருந்தார். அப்பொழுது நானும் அவரை அறியமாட்டேன்; அவரும் என்னை அறியமாட்டார். அவர் யார் என்பதைப் பிறரிடம் வினாவித் தெரிந்து கொண்டேன். நாங்கள் சென்ற முதல் நாள், நண்பகல் உணவு முடிந்தவுடன், பெரியார், சம்பத், அவர் தந்தையார், ஆவுடையப்பன், நான் ஆகிய எல்லோரும் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். என்னை அடுத்துத் தோழர் சம்பத் அவர்கள் உட்கார்ந்திருந்தார். { நான், "நீங்கள் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கி றீர்களா?" என்று அவரைக் கேட்டேன். "ஆமாம்!" என்றார். "எந்த வகுப்பு?" என்றேன். "முதல் வகுப்பில் படிக்கிறேன்!" என்றார். அவர் திரும்ப என்னைப் பார்த்து, "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். "நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறேன்!" என்றேன். "எந்த வகுப்பில் படிக்கிறீர்கள்?" என்றார்; "நான்காம் ஆனர்சு வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறேன்!" என்றேன். " "அங்கே தாடிவைத்துக்கொண்டு நாராயணசாமி என்று ஒருவர் இருக்கிறாராமே என்றார்; "ஆமாம்!' என்று புன்சிரிப்போடு கூறினேன். 'அவரை உங்களுக்குத் தெரியுமா?" என்றார்; "தெரியும்!" என்றேன். "அவரோடு நெருங்கிய பழக்கம் உங்களுக்கு உண்டா?" என்றார்; "உண்டு!" என்றேன். "அவர் நமது இயக்கப் பற்றுடைய யவராமே?" என்றார்; "ஆமாம்!" என்றேன். 'அவர் எப்படி?" என்றார்; அதற்குமேல் என்னை ய என்னால் மறைத்து வைத்துக்கொள்ள முடியவில்லை. நான் சிரித்துக் கொண்டு "அவர்தான் நான்!" என்றேன்.தோழர் சம்பத் அவர்கள் உடனே வியப்படைந்து, "அவரா நீங்கள்?" என் றார். "ஆமாம்!" என்றேன். "தாடி உண்டு என்று சொன் னார்களே!" என்றார். தாடி வைத்திருந்தேன். நான்கு நாட்களுக்கு முன்புதான் எடுத்துவிட்டேன்! என்றேன். பிறகு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.