24 வும் விளங்குகின்றது. தமிழ் இசை இனிமையானது என்பது மட்டுமல்லாமல், மென்மையானது என்பது மட்டுமல்லாமல், பலப்பல வகைப்பாடுகளை வேறு எந்த இசைத்துறையும் கொள்ளாத அளவிற்குக் கொண்ட ஒரு சிறப்பையும் தமிழ் இசை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ் இசை தனித் தன்மையைக் கொண்டதும் ஆகும். அதுமட்டுமல்லாமல் இத் தமிழ் இசை அழியாச் செல்வமாகவும் இருந்துவரும் ஒன்று உலக நாகரிகங்களையெல்லாம் நாம் பார்க்கின்ற போது நாகரிகங்களின் தொடக்க காலத்திலே வளர்ந்த இசைகள் அந்த நாடுகளிலே இப்போது இல்லை. ஆனால் தமிழகத்தில் தமிழ் நாகரிகத்தின் தொடக்க காலத்திலே இருந்த அதே இசைதான் தொடர்ந்து வழிவழித் தலைமுறையாகக் கையாளப்பட்டு இலக்கண வரம்பு கெடாமல், கட்டுக்கோப்புக் குலையாமல், பொலிவு குறையாமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டு வருகின்ற பாங்கும். அழியாமல் பாதுகாத்துக் கொள்கின்ற பாங்கும், இலக்கண வரம்பு மீறாத அளவிற்குக் கட்டிக்காத்து வளர்ந்து வருகின்ற பரங்கும் கொண்டது. அத் தகைய இசையை வளர்த்தது- வளர்ப்பது தமிழ்ச் சமுதாய மாகத்தான் இருந்து வருகின்றது என்பதை நாம் காணுகிறோம் மற்றைய இசைகளைப்பற்றி வரலாறுகளிலும், கலைக் களஞ்சியங்களிலும் அவற்றினுடைய அருமை பெருமைகள் கூறப்பட்டிருக்கின்றனவே அன்றி, அதே இசையை இப்போது பாடிக்காட்டுகிறவர்கள் எவரும் வேறு எந்த நாகரிகத்தைச் சார்ந்தவர்களும் இப்போது உலகநாடுகளில் வேறு எங்கும் இல்லை. அந்த வகையிலே மிகத் தொன்மையானது. அழி யாதது,அதுமட்டுமல்லாமல் தனித்தன்மை கொண்டது, தனிச் சிறப்பு இயல்புகளைக் கொண்டது. இவ்வளவு அரும்பெரும் தன்மைகளுக்கெல்லாம் எடுத்துக் காட்டாக விளங்குகின்ற தன்மையினைப் பெற்றிருப்பது தமிழ் இசையாக இருக்கின்றது. முத்தமிழின் முதன்மை இயல், இசை, நாடகம் என்று வருகின்றபோது எந்த மொழிக் கூறுபாட்டை உணர்ந்த பேரறிஞர்களும் வகுக்காத
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/26
Appearance