இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
258 இதுதான் நானும் தோழர் சம்பத் அவர்களும் கூடிப் பேசிய முதல் தடவையாகும். அப்பொழுதெல்லாம் தோழர் சம்பத் அவர்களுக்கு இயக்கப்பற்று உண்டேதவிர, இயக்க நடவடிக்கைகளில் ஆர்வமோ, எழுச்சியோ இருப்பதில்லை. பிறகு பச்சையப்பன் கல்லூரி விடுதியில் இரண்டாம் முறையாக அவரைக் கண்டேன். அப்பொழுது அவர் கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும், மாணவிகளும் கண்டு அஞ்சும்படியான முரட்டு மாணவர்களின் கூட்டத்திற்குத் தலைவராக விளங்கினார். காலஞ் சென்ற பேராசிரியர் வரதராசன் அவர்கள்தான், அவருக்கு உற்ற நண்பர், முரட்டு மாணவர் சம்பத்' துக்கும், 'கனிவான அரசியல் தலைவர் சம்பத்துக்கும்' இடையில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.