உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. "நீ உருப்படப் போவதில்லை!" 1938ஆம் ஆண்டில், நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, (பிறகு இடையில் படிப்பை நிறுத்திவிட்டு, மறு ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்று விட்டேன்) இந்தி எதிர்ப்பு இயக்கம் சென்னையிலும், பிற இடங்களிலும் மிகத் தீவிரமாகப் பணியாற்றிக் கொண் டிருந்தது. இந்தி எதிர்ப்பு மறியல் நாள்தோறும் நடை பெற்றுக் கொண்டிருந்தது. பலர் சிறையில் தள்ளப் பட்டிருந்தார்கள். சிலர் சிறைக்குள்ளே புகுந்து கொண் டிருந்தார்கள்: சிலர் சிறையிலிருந்து வெளியே வந்து கொண் டிருந்தார்கள். முக்கிய தலைவர்கள் வெளியே வரும்போது வரவேற்பும்,ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடைபெறு வது உண்டு. ஒரு நாள் சென்னை மத்திய சிறையிலிருந்து சில முக்கிய மானவர்கள் வெளிவருகிறார்கள்; அவர்களுக்கு ஐலண்டு திடலில் வரவேற்பு அளிக்கப்படும்; பிறகு அவர்கள் ஊர்வல மாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற செய்தியறிந்து நான் ஐலண்டு திடலுக்குச் சென்றிருந்தேன். சிறையிலிருந்து வெளிவந்தவர்களுக்கு மாலைகள் சூட்டி, அவர்களைக் கோச்சு வண்டியில் உட்காரவைத்து, ஒலி முழக்கங்கள் எழுப்பி ஊர்வலமாகப் புறப்பட்டனர்.தமிழ் - வாழ்க!' 'இந்தி-ஒழிக', 'ஆச்சாரியார் ஆட்சிஒழிக!' என்பன போன்ற ஒலி முழுக்கங்கள் விண்ணதிர எழும்பின. ஒருவர் எங்கேயோ நினைவாக, "என்.வி.நடராசன்" என்று