7 200 சொல்லியபோது, "ஒழிக" என்று குரலெழுப்பினர். பக்கத்தில் வந்துகொண்டிருந்த பலரும் சிரித்தார்கள். எல்லோரும் சிரிப்பதைப் பார்த்த பிறகுதான், அவர் தாம் தவறான ஒலி முழக்கத்தை எழுப்பிவிட்டோம் என்பதை உணர்ந்து, ஏமாந்த புன்சிரிப்பு சிரித்தார். அவர் யார் என்றால், அவர்தான் தோழர் என்.வி.நடராசன்! அப் பொழுது நான் கூட்டத்தோடு கூட்டமாக வந்துகொண் டிருந்த பலரில் ஒருவனாகக் காட்சியளித்தேன். பிறகு 1944 இல் சென்னையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டின் போதுதான், முதன்முதலாக அவரும் நானும் அறிமுகப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. ய தோழர் என். வி.நடராசன் அவர்களின் பொதுத் தொண்டின் பலன் காங்கிரசுக் கட்சி, தமிழர் இயக்கம். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளுக்கு முறையே வளர்ச்சியையும், முற்போக்கான வரலாற்றையும் காட்டும் வகையில் பயன்பட்டு வந்திருக்கிறது. அவர் ஆர்வத்திற்கும், எழுச்சிக்கும், உண்மைப்பற்றுக்கும், நேரிய உழைப்பிற்கும், பொதுநலம் பேணும் தன்மைக்கும், செய லாற்றும் திறமைக்கும், சலியா முயற்சிக்கும், எளிமைப் போக்கிற்கும் எடுத்துக்காட்டாக என்றென்றும் விளங்கி வந்திருக்கிறார். அவர் தொடர்பு கொண்ட அவ்வளவு அமைப்புக்களிலும் அவற்றின் தலைவர்களால் மிகமிகப் போற்றிப் பாராட்டப்பட்டு, அவர்களின் மிக நெருங்கிய நம்பிக்கைக்கு உரிய ஒருவராகவே காட்சியளித்து வந்திருக் கிறார். அவரது நேரிய தொண்டுள்ளம் அவரை நாளுக்கு நாள் உயரிய நிலைமைக்கு உயர்த்திக்கொண்டு போகிறது. அவர் காங்கிரசில் மிகத் தீவிரத் தொண்டராகப் பணி யாற்றிய காலத்திலிருந்தே, அறிஞர் அண்ணா அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்து வருபவராவர்.அவர் அந்த நாட்களில் கட்சி என்னும் பேச்சு எழும்போது. நெருப்பின் தன்மையோடும், நட்பு என்னும் பேச்சு எழும்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/262
Appearance