இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
261 போது தண்ணீரின் தண்மையோடுந்தான் அறிஞர் அண்ணா அவர்களை அணுகுவாராம். தோழர் நடராசன் அவர்களை கேலி- கிண்டல் சுழலிலே சிக்கவைத்து மகிழுவது என்பது அண்ணா அவர்களுக்கு அந்தக் காலத்திலிருந்தே அமைந்து விட்ட வேடிக்கை விளையாட்டாகும். தோழர் என்.வி.நடராசன் அவர்கள் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசிவிட்டு, காங்கிரசு உறுப்பினர் தகுதியையும் விட்டுவிட்டுக் காங்கிரசுக் கூட்டத்தை விட்டு டு வெளியேறும்போது, கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய காலஞ் சென்ற தோழர் எஸ். சத்தியமூர்த்தி அவர்கள், "நீ உருப்படப் போவதில்லை!... என்று சபித் தாராம்! அவரது வாக்கைத் தோழர் நடராசன் அவர்கள் இன்று பொய்யாக்கிக் காண்பித்துவிட்டார்கள். அவர் காங் கிரசிலேயே தொடர்ந்து இருந்திருந்தால், சத்தியமூர்த்திக் குழுவினர் உருப்பட விட்டிருப்பார்களா என்பது ஐயப் பாடே!