38. கள்ளமில்லா வெள்ளையுள்ளம்! நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது 1943ஆம் ஆண்டில், தில்லைநகரை அடுத்த சிற்றூரில் நடைபெற்ற நீத்தார் நினைவுநாள் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள, அவ்வூர் நண்பர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள். நோக்கி குரல் நான் கூட்டம் நடைபெற்ற இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, கூட்டம் தொடங்கப்பெற்று ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய பட்டுக்கோட்டை தோழர் கே.வி. அழகிரிசாமி அவர்களின் குரல்போன்ற சாயல் உடையதாகவும், அவருடைய பேச்சு தோழர் அழகிரிசாமி அவர்களுடையதைப் போன்று கேலி கிண்டல் விரவியதாகவும் காணப்பட்டன. "அழகிரிசாமியின் வாரிசு" போலிருக்கிறது என்று வியப்புணர்ச்சியுடன் எண்ணிக்கொண்டு. விழாக் கூட்டத்திடையே சென்று அமர்ந்தேன். எடுப்பான தோற்றமும், நிமிர்ந்த போக்கும், மிடுக்கான அசைவுகளும் கொண்ட ஒருவர் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டேன். கண்டேன். "பேசிக்கொண்டிருப்பவர் யார்?" என்று என் அருகில் அமர்ந்திருந்த நண்பர் கேட்டேன். ஒருவரைக் இவர்தான் காஞ்சி கலியாண சுந்தரம்!" என்றார் அந்த நண்பர். கேள்விப்பட்டிருந்த ஒருவரை நேரில் காணவும், கண்டு அளவளாவவும் அன்று வாய்ப்பு ஏற்பட்டது கண்டு மகிழ்ச்சியுற்றேன். மிக நீண்ட நாட்களாகத் தொடர்ந்து இயக்கப்பணி ஆற்றிவருகிற ஒரு சில முக்கியமானவர்களில் தோழர்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/264
Appearance