உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 காஞ்சி கலியாணசுந்தரம் அவர்களும் ஒருவராவார். அறிஞர் அண்ணா அவர்கள் அரசியலில் உலகில் பங்கு கொள்ளாது கல்லூரி மாணவராக இருக்கும்போதே, தோழர் கலியாண சுந்தரம் அவர்கள், காஞ்சி மாநகரில் பகுத்தறிவு இயக்கப் பணிகளையும், நீதிக்கட்சிப் பணிகளையும் மிகத்தீவிரமாகச் செய்துவந்தவராவார். காஞ்சிபுரத்தில் இயக்கம் வளர் வதற்கு ஆரம்பக் காலத்தில் அடிப்படை கோலியவர் தோழர் காஞ்சியார் என்றால் அது மிகையாகாது, கோயில் களும், வைதீகர்களும் மிகுதியாகவுடைய காஞ்சி புரத்தில், ஆரம்ப நாட்களில் இயக்கத்தை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான செயலல்ல. வைதீகம் வழங்கிய கல்லடி, சொல்லடி, வல்லடி ஆகியவைகளையெல்லாம் தன்னந்தனி யாக இருந்து தாங்கி, அவைகளை எதிர்த்து நின்று, இயக் கத்தை மெல்லமெல்ல, ஆனால் உறுதியாக வளர்த்து விட்டவர் அவர்தான். தோழர் கலியாணசுந்தரம் அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் வல்லவர். நடிப்பதிலும் ஆர்வங்கொண்டவர். எதற்கும் அஞ்சாமை; மனத்தில் பட்டதை அப்படியே வெளியிடும் தன்மை; மனத்திற்குப் பிடிக்காதவர்களை அவர்கள் யாராயிருந்தாலும் சரி வெளிப்படையாகப் புறக் கணிக்கும் தன்மை; நண்பர்களிடத்தில் குழந்தைபோல் பழகுதல்; மிக நெருங்கிய நண்பர்களிடத்தில் மிக்க அன்புரிமை பாராட்டுதல் போன்ற பண்புகள் அவரிடம் சிறக்கக் காணப்பெறும். அவர் அரசியல் - பொருளாதார - சமுதாயப் பிரச்சினைகள் பற்றி நுணுக்கங்களைத் தெளிவாக அறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர். அவர் உள்ளங்கவர்ந்த தத்துவப் பேராசிரியர்களிலே காலஞ் சென்ற தோழர் எம்.என்.ராய் அவர்கள் முக்கியமான ஒருவராவார். தோழர் கலியாணசுந்தரம் அவர்களுக்கு மிக்க மதிப்பும் யாராவது ஒருவரிடத்தில் மிக்க அன்பும் - மிக்க மரியாதையும் உண்டு என்றால், அவர்தான் அறிஞர் அண்ணா அவர்கள் ஆவார்கள். -