25 ஒன்றைத் தமிழ் இலக்கண வல்லுநர்களும் புலவர்களும் மிகச்சிறப்பாக மூன்று என்ற அடைமொழி கொடுத்து முத்தமிழ் என்று வகுத்தார்கள். உலகத்திலே மொழிகளுக்கு இலக்கணம் வகுத்த வல்லுநர்களும் சரி, இலக்கியப் பேரறிஞர்களும் சரி, அவர்கள் மூன்று என்ற அடைமொழியைத் தங்கள் மொழிக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தமிழ் மொழியைத்தவிர உலகத்தில் வேறு எந்த மொழியைச் சார்ந்தவர்களும் கொள்ள வில்லை. தமிழ் ஒன்றிலேதான் முத்தமிழ் என்ற அடைமொழி யோடு மொழியைப் போற்றிப் பாராட்டி வரவேற்கத்தக்க தொரு சூழ்நிலையை நாம் பெற்றிருக்கிறோம். அதற்குக் காரணம், எதையும் இயற்கையோடு இயைந்து, தன்மையை உணர்ந்து, ஆராய்ந்த தன்மை தமிழரிடத்திலே மிகச்சிறப்பாக இருந்ததுதான். உள்ளத்தினுடைய பொலிவை - சிந்தை யினுடைய பொலிவை- பெரிய அழகை - வெளியே எடுத்துச் சொல்லுகின்ற ஒன்று இயற்றமிழ். உரையினுடைய பொலிவை -சொல்லினுடைய பொலிவை - குரலினுடைய பொலிவை - அழகை - வலிவை வெளிப்படுத்துகின்ற ஒன்று இசை; உடலினுடைய அழகை-உடலினுடைய பொலிவை - உடலி னுடைய தன்மையை வெளியே எடுத்துச் சொல்லுவது இயக்கத் தமிழ் அல்லது ஆடல், கூத்து, நாடகம், நாட்டியம் ஆகிய ஒன்று. இதனைக் கூத்துத்தமிழ், நாடகத் தமிழ், அல்லது இயக்கத் தமிழ் என்றும் நாம் சொல்லுகின்றோம். இவ்வாறு மூன்று தன்மைகளையும் நன்கு ஆராய்ந்து, தமிழ்ப் பெரும்புலவர்கள் மிகச்சிறப்பாக முத்தமிழ் என்று பெயரிட்டார்கள். அது மட்டுமல்லாமல், இலக்கணம் வகுத்த பொழுதும்கூட இயற்கையோடு இயைந்த தன்மையைக் கொண்டிருக்கின்ற காரணத்தால்தான், இயற்கையைப் பார்த்து எழுத்துக்களுக்குப் பெயர் வைக்கும்போதுகூட உயிரெழுத்து, மெய்யெழுத்து, உடம்படுமெய்,உரிச்சொல் இடைச்சொல், மெய்யீற்றுப் புணர்ச்சி உயிரீற்றுப்புணர்ச்சி, ஆய்தம் என்ற காரண காரிய விளக்கங்களோடு பெயர்களை அ.2
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/27
Appearance