26 < வைத்திருக்கிறார்களே தவிர, காரண காரிய விளக்கங்கள் இல்லாமல் இந்தப் பெயர்களை இடவில்லை இந்தத் தன்மை யினுடைய அடிப்படையிலேதான்-காரண காரிய விளக்கத் தோடுதான் - முத்தமிழ் என்றும் பெயரிட்டார்கள்.மொழிக்கே மூன்று தன்மைகள் உண்டு என்று கண்டறிந்த தன்மை, தமிழ்ப் பெரும் புலவர்களுக்குத்தான் உண்டு. முத்தமிழ் என்று மேலெழுந்தவாரியாக எடுத்துச் சொல்லுகின்ற பொழுது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று கூறுகின்றார் கள் என்றாலும், இயலுக்கென்று ஒரு தமிழ், இசைக்கென்று ஒரு தமிழ், நாடகத்திற்கென்று ஒரு தமிழ்- தனித்தனித்தமிழ் உண்டா என்று கேட்டால் இல்லை. "மாடு மேய்ப்பவனிடம் எனக்கென்ன வேலை, வஞ்சி என்றழைத்தான், ஏனென்றேன் மாலை" என்பதை எழுதிக் காட்டினால் இயல். அதனை இசைவல்லுநர்களை அழைத்து அதனோடு பண் சேருங்கள் என்று சொன்னால்-பண்ணைச் சேர்ப்பார்களே தவிர, தமிழ் ஒன்றும் புதிதாகப் படைக்கப் படுவதில்லை. இசைக்கென்று ஒரு தனித்தமிழே கிடையாது. நாடகத்துக்கென்று ஒரு தனித்தமிழே கிடையாது. மேற் காட்டிய வரியைப் புலவர் எழுதிக் காட்டினால், இயலாக இருக்கிறது. அதனை இசைவல்லுநர்களைக் கொண்டு, ஏற்றதொரு பண் சேர்த்து, அந்தப் பண்ணை ஆலாபனம் செய்து பாடுவார்களேயானால் அது இசையாக மாறுகிறது. அதற்கே நாட்டியம் ஆடச் சொன்னார்களேயானால், அதற்கு என்னென்ன உடல் உறுப்புக்களை அசைத்துக் காட்ட வேண்டுமோ அந்த அசைவுகளைக் காட்டி, வெளிப்படுத்து வார்கள். எனவே, நாடகத்திற்கென்று தனித்தமிழ் பிரிக்க முடியாது. காய்கறிகளைக் கொண்டுவந்து கொட்டினால் இது இன்ன காய், அது இன்ன காய் என்று பிரித்துப் பெயர் சொல் லலாம். அதுபோல் தமிழைப் பிரித்துக்காட்ட இயலாது. இயல்தான் இசையாக மாறும்; இசைதான் நாடகத்திற் குப் பயன்படும். ஆனால் பொதுவாகப் பார்க்கிறபொழுது
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/28
Appearance