27 இயலாக விளங்குகின்ற தமிழ், இசையாக விளங்குகின்ற தமிழ், நாடகமாக விளங்குகின்ற தமிழ் என்று மூன்று கிடையாது. ஆனால் இசையோடு கூடிய தமிழ், நாடகத்தோடு கூடிய தமிழ், இயலாக இருக்கும் தமிழ் என்ற முத்தன்மைகள் உண்டு. மொழிக்கு இயல் தன்மையும் உண்டு; இசைத் தன்மையும் உண்டு; நாடகத் தன்மையும் உண்டு என்று அமைத்திருக்கிறார்கள். ஓர் எடுத்துக்காட்டுச் சொன்னால் இந்தத் தன்மைகள் விளங்கும் என்று நினைக்கிறேன். "வா" என்பது ஓரெழுத்து ஒரு மொழி. இது “வா” என்று மொழியாக மட்டும் இருக் கும்போது இயல். ஒரு குழந்தையை "வா" என்று அழைக் கின்றபோது பற்று,பாசம், பந்தம், அன்பு ஆகியன முகத்தில் மெய்ப்பாடாக வெளிப்பட, இரு கையும் நீட்டி அன்பு குழைய நெஞ்சம் குழைய குரல் குழைய அச்சொல் இசையோடு வரு கிறது. வேலைக்காரனை “வா" என்று அழைக்கும்போது, குழந்தையை அழைக்கிறபோது அந்தச் சொல்லில் ஏற்படுகிற குழைவு வராது. அந்த "வா"வுக்கு உள்ள இசையே மாறும். ஆனால் இயல் ஒன்றுதான்; வேலைக்காரனை அழைக்கும் போது அந்தச் சொல்லில் கடுமை இருக்கும்; முகத்தில் குழைவு இருக்காது. குழைந்தால் வேலைக்காரன் மடியில் வந்து உட்கார்ந்தாலும் உட்கார்ந்துகொள்வான். அதே நிலையில் ஒரு நண்பனைக் கூப்பிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அன்பிருக்கும் ; ஆனால் குழந்தையை அழைக்கிற அந்தக் குழைவு இருக்காது. ஆகவே குழந்தையை அழைக்கும்போது இயலுடன் சேருகிற இசை நாடக அமைப்பு வேறு; வேலைக் காரனைக் கூப்பிடும்போது சேருகிற இசை நாடக அமைப்பு வேறு; நண்பனைக் கூப்பிடும்போது சேருகிற இசை நாடக அமைப்பு வேறு; மனைவியை அழைக்கும்போது எவ்வளவு கொஞ்சுதல், எவ்வளவு கனிவு, இன்னும் சொல்லப்போனால் எவ்வளவு பணிவு. ஆகவேதான் உலகத்திலே உள்ள எந்த ஒரு மொழியை எடுத்துக்கொண்டாலும், அதற்கு இயல் தன்மை யும் உண்டு; இசைத்தன்மையும் உண்டு; நாடகத் தன்மை
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/29
Appearance