உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 யும் உண்டு. இந்தத் தன்மையை நுணுக்கமாக உணர்ந்தமை யால்தான் தமிழ்ப் பெரும் புலவர்கள் முத்தமிழ் என்று அழைத் தார்கள். மூன்று என்ற அடைமொழி, உலகத்தில் வேறு எந்த மொழிக்கும் இல்லாமல் இந்த மொழிக்கு மட்டும் இருப்ப தற்குக் காரணம், மொழிக்கு மூன்று தன்மை உண்டு என்று உணர்ந்தமையே. இனிய சர்க்கரை என்று சொல்லும்போது, இனிய என்பது சர்க்கரையின் பண்பை உணர்த்தும் இயல்பான அடைமொழி. இனிய என்னும் அடைமொழியால் கசப்பான சர்க்கரை, துவர்ப்பான சர்க்கரை என்றெல்லாம் உலகத்தில் உண்டா?' என்று கேட்கக்கூடாது. இதுபோலத் தமிழினுடைய மூன்று பண்புகளை முத்தமிழ் என்பதிலுள்ள மூன்று என்ற அடை உணர்த்துகிறது. தமிழில் 'ஒலி' பற்றிய சொற்கள் ஓசைகளைப்பற்றியும் தமிழ்பெரும் புலவர்கள் பல்வேறு வகைகளில் விளக்கம் காட்டிப் காதிலே ஓசை பலவிதமாக கூறினர். பெயரிட்டிருக்கின்றார்கள். வந்து விழும். பொதுவாகப் பொருள் விளங்காமல், பொருளே குறிக்காமல், காதில் வந்து விழுகின்ற ஒன்றைத்தான் ஓசை என்றனர். ஒன்றும் புரியா விட்டால், அது என்ன சப்தம் கேட்கிறது என்றுதான் கேட் போம். தமிழில் அரவம் என்ற ஒரு சொல் உண்டு. தொண்டை யிலிருந்து எழுகின்ற ஒலியைக் குரல் என்று ஆரவாரம்என்பது பெரிய ஊர்வலத்தில்பல இயங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்கின்ற ஒலியைக் குறிக்கும். இரைச்சல் என்பது மழை பெய்யும்போது உண்டாகும் ஒலியைக்குறிக்கும்; அருவி யிலிருந்து நீர் விழும் ஓசையையும் இரைச்சல் என்று சொல் வோம்; சந்தைக் கடைக்குப் போனாலும், கடைத் தெருவுக் குப் போனாலும், இரைச்சல் என்போம். ஆகவே பெருங்கூட் டத்தில் பலபேர் பலவகையாகச் சொல்கின்ற சொற்கள் கூடிக் கலந்து விழுகின்ற ஓசையை இரைச்சல் என்கிறோம். ஆர்ப்பு என்பது வாழ்த்தொலி எழுப்பும்போதும், கண்டன ஒலி