உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 எழுப்பும்போதும் உண்டாகின்ற ஓசையைக் குறிப்பது, இதிலி ருந்துதான் ஆர்ப்பாட்டம் என்ற சொல் தோன்றியுள்ளது.நாம் ஒன்று சொல்லி அது மலையின்மீது பட்டோ, கட்டடத்தை மோதியோ எதிரொலியாக வருமானால் அதனைச் சிலம்பு என்பர். சிலை என்பது பாடும்போது கலகல என்று எழுகின்ற ஓசை. பெருந் திருவிழாக்கள் நடைபெறுகின்ற பொழுதும், பெரிய ஆரவாரம் மிக்க கடைத்தெருக்களில் பொருள்களை விற்பனை செய்யும்பொழுதும் வாங்கும்பொழுதும் ஏற்படு கின்ற ஒலி, சந்தடி எனப்படுகின்றது. கூச்சல் என்பது, பலர் சேர்ந்து கத்துகின்ற ஒலி. இதற்குப் பொருள் கிடையாது. சண்டை நடக்கும் பொழுது, சச்சரவு இடும்பொழுது, போர் நடக்கும்பொழுது ஏற்படும் ஒலி பூசல் எனப்படும். முழக்கம் என்பது இடி முழங்குகிறது, சிங்கம் முழங்குகிறது. முரசு முழங்குகிறது போன்ற இடங்களில் பயன்படுகிறது. சந்தம் என்பது இசைஒத்த அடிகளைக்கொண்ட பாட்டொலியைக் குறிக்கும். எழுத்து ஒத்த அடிகளைக் கொண்ட பாட்டொலி யைத்தான் பண் என்பர். ஆனால், இந்த ஓசைகளெல்லாம் காதில் வந்து விழுவதைவிட இதயத்தைத் தொடுமாறு வந்து விழுகின்ற ஒரு ஒலியைத்தான் இசை என்றனர். இசைவிப்பது இசையாகும். இனிய ஒலியைக் கொண்டது இசை; ஈர்ப்பது இசை; நம் நெஞ்சைப் பறிப்பது இசை! வழிவழி வந்த இசை நம்முடைய தமிழ் இசை நீண்ட பெருங்காலமாக-பன் னெடுங்காலமாக - பல்லாயிரம் ஆண்டுக்காலமாகப்பண்பட்டுப் பண்பட்டு - தோய்ந்து தோய்ந்து- இயற்கையோடு இயைந்து இயைந்து - வளர்ந்து வளர்ந்து- செம்மைப்பட்டுச் செம்மைப் பட்டு - வழிவழித் தலைமுறையாக வருகின்ற இசைவாணர் களாலும் கலைஞர்களாலும் மெருகு ஏறிஏறி - புதுமை பெற்றுப்பெற்று-பொலிவைக் கூட்டிக்கூட்டி - சிறப்பை வளர்த்து வளர்த்து இப்போது நம்முடைய கையிலே நடமாடு கின்ற அளவுக்கு வந்துள்ளது. தமிழ் இசையின் வலிமையை-