30 இசைவிக்கின்ற தன்மையைச் சங்க இலக்கியப் புலவர்கள் மிகச்சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். சங்க காலத்தில் தமிழ் இசை "புதலும் வரிவண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே” என்பது குறுந்தொகை 260-ம் பாடல். காடுகளில் இருக்கின்ற வண்டுகள் இசை பாடுகின்றபொழுது, புதர்களில் இருக்கின்ற மொட்டுகள் மலர்ந்து நிற்கின்றன என்று புலவர் ஒருவர் அக் குறுந்தொகையில் பாடியுள்ளார். ஓரறிவு படைத்த மரம் செடிகள்கூட இசையினால் வளரும் நகரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 15,20 ஆண்டுகளுக்கு முன்னால் ஆராய்ந்தவர்கள், இசையுடன் கூடிய நாற்றையும் வளர்த்து, இசை இல்லாமல் நாற்றையும் வளர்த்து, இசையினால் அணுக்களே திரிந்து வளர்ச்சி அடை கின்றன என்று மெய்ப்பித்திருக்கிறார்கள். குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த பெண்ணொருத்தி குறிஞ்சிப் பண் பாட, தினையை உண்ணவந்த யானைகள் அச் செயலை மறந்து, அவள் பாடிய இசை கேட்டு உறங்கின என்று அகநானூற்றுப் பாடல் (102) மிக அழகுறச் சொல்கிறது. "ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக் குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென மறம்புகல் மழகளிறு உறங்கும் நாடன்” என்பது பாடல். பாலை நிலத்திலே உள்ள ஆறலை கள்வர்கள் வழிச் செல்பவர்களின் பொருளை ஈவு இரக்கம் இல்லாமல் பறித்துக் கொள்ளுகின்ற வன்நெஞ்சம் படைத்தவர்கள். அத்தகையவர் கள் வாழ்கிற பாலைநிலத்தின் வழியே செல்பவர்கள் பாலைப்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/32
Appearance