31 பண்ணைப் பாட, ஆறலை கள்வர்களின் கையிலே இருந்த கொடிய ஆயுதங்கள் நழுவி விழுந்தன. கொலைகாரர்களாக விளங்குகின்ற அந்த ஆறலை கள்வர்கள், அருள் பாலிப்பவர் கள்போல நின்றார்களாம். "ஆறலை கள்வர் அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை" இவ்வாறு பொருநராற்றுப்படை கூறுகின்றது. வீரனொருவன் போர்க்களத்தில் புண்பட்டுக் கிடக்கின் றான். அப்போது அவனுடைய மனைவி காஞ்சிப் பண்ணைப் பாடி அவ்வீரனுக்கு ஆறுதல் தந்தாள். அவனைக் கொத்த வருகின்ற பருந்து போன்ற பறவைகள் அகன்றன. இதனைப் புறநானூறு (281) அழகுற எடுத்து இயம்புகிறது. “தீங்கனி இரவமொடு வேம்புநனைச் செரீஇ வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக் கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி ஐயவி சிதறி ஆம்பல் ஊதி இசைமணி எறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பின் கடிநறை புகை இக் காக்கம் வம்மோ-காதலந் தோழீ! வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!! என்பது புறநானூறு. ஏன் இவற்றையெல்லாம் எடுத்துச்சொல்கின்றேன் என் றால், சங்க காலத்திற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சிப் பண்ணும், பாலைப்பண்ணும் உயர்ந் தோங்கிச் சிறந்திருக்கவேண்டும் என்பதற்காகத்தான். இந்தப் பண்ணினுடைய பெயர்கள் இப்போது மாறியிருக்கின்றன. இப் பெயர்களை எல்லாம் அறிஞர்கள் ஆராய்ந்து இருக்கிறார் பாலைப் பண்ணைத்தான் அரிகாம்போதி என்று சொல் கிறார்கள் என்றும், குறிஞ்சிப் பண்ணைத்தான் சங்கராபர கள். .
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/33
Appearance