32 ணம் என்று சொல்கிறார்கள் என்றும், மருதப் பண்ணைத் தான் கல்யாணி என்று குறிப்பிடுகிறார்கள் என்றும், செவ்வழிப்பண்ணைத்தான் தோடி என்று குறிப்பிடுகிறார்கள் என்றும் ஆராய்ந்து முடிவு செய்திருக்கிறார்கள். தமிழ் இசையின் தாயகம் தமிழகமே மருத்துவம், சிற்பம், நாட்டியம், இசை முதலிய கலைகள் தமிழகத்திற்கே உரிய கலைகளாகும். இந்த மண்ணிலேயே தோன்றியவைகள். இந்த மண்ணிலே தோன்றிய கலைஞர் களும், புலவர்களும் உருவாக்கிய கலைகள் அவை. இவை களைப் பற்றிய நூல்கள் தமிழிலே மிகச்சிறப்பாக இருந்தன. என்பதனைச் சிலப்பதிகாரத்தாலும், சங்க இலக்கியத்தாலும், தொல்காப்பியத்தாலும் காணலாம். இக் கலைகளுக்குரிய சட்டதிட்டங்கள், வரையறைகள் எல்லாம் தமிழிலேயே சிறப் பாக இருந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுது அவை கிடைக்கவில்லை. இப்பொழுது வடமொழியைக் கொண்டே, வடமொழிப் பெயர்களைக் கொண்டே, இக் கலைபற்றிய செய்திகளை அதனால், இக் கலைகள் வடமொழியிலிருந்து வந்தன என்று பலபேர் நினைக் கின்றார்கள். அதற்கான ஆராய்ச்சியும் செய்து அங்கிருந்து தான் இங்குவந்தது என்றும் காட்டுகின்றார்கள். தமிழ்நாட் டில், இடைக்காலத்தில் பல்லவர் வந்த பின்னர் - இக்காலத் தில் ஆங்கிலம் செல்வாக்குப் பெற்றிருப்பதுபோல அக்காலத் தில் வடமொழி செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆகவே, ஒவ்வொருவரும் தமிழிலும் வல்லவர்களாக இருந்தார்கள்; வடமொழியிலும் வல்லவர்களாக இந்தார்கள். மூல நூல்களையே வடமொழியில் எழுதிய அறிஞர்கள் அறிந்துகொள்கின்றோம். தமிழ் நாட்டில் பிறந்துவளர்ந்தவர்களாகக் காட்சித் தருகின்றனர். வடமொழியில் தமிழ்க் கருத்துக்களை மொழிபெயர்த்தும் தந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிற்காலத்தில் வாழ்ந்தவர் கள் மிகச் சிறப்பாக வடமொழி அறிவு பெற்றிருந்தார்கள். கம்பன்கூட மிகத்தேர்ந்த வடமொழி அறிஞனாக இருந்திருக்க
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/34
Appearance