உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வேண்டும். இல்லையென்றால், படைப்பில் - கருத்தில் எவ் வாறு வேறுபடுவது என்று அறிந்து எழுதியிருக்க இயலுமா? திருமறைக்காட்டை வேதாரணியம் ஆக்கியதுபோல், பழ மலையை விருத்தாசலம் என ஆக்கியதுபோல், பண்ணின் பெயர்களை மாற்றியிருக்கிறார்கள். எந்த மொழிக்கு எந்தக் கலை உரியதோ அந்தக்கலை அந்த மொழிக்கு உரிய இடத் தில்தான் வாழும்; வளரும். இந்த இசை வடமொழிக்கு உரியது என்றால் வடமொழி எங்கு எங்குப் பரவி இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த இசை இருந்திருக்கவேண்டும். காசியிலும் இருந்திருக்கவேண்டும்; கல்கத்தாவிலும் இருந்திருக்கவேண் டும். இவ்வாறு இந்தியா முழுவதும் இந்தக் கர்நாடக இசை பரவியிருக்கவேண்டும். அவ்வாறு இல்லை என்பதனாலேயே அந்தக் கலைக்குரிய இடம் தமிழ்நாடு; அதற்குரிய மொழி தமிழ் என்பது உறுதியாகிறது. இவ்வாறுதான் சிற்பக் கலை, சித்த மருத்துவக் கலை, நாட்டியக் கலை முதலியனவும் தமிழகத்துக்கே உரியன. ஆனாலும், அந்தக் கலைகளைப்பற்றி வடமொழியில் எழுதி வைத்தார்கள். அதனாலேயே இவை வடமொழிக்குச் சொந்த மான கலைகள் எனக் கூறிவிடமுடியாது. நாட்டியக் கலையும் தமிழகத்துக்கு உரியது. சிலர் இது காஷ்மீரத்துக்குரியது என்று அங்குக் கொண்டுபோக நினைக்கிறார்கள். இன்னும் சிலர் மத்திய ஆசியாவுக்கே இக் கலையைக் கொண்டுபோக லாமா என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இக் கருத் துக்களெல்லாம் பொருத்தமானவைகள் அல்ல. பண்ணும் பாட்டும் இதயத்தைத் தொட்டால்தான் இசை. வெறும் இராக மாக மட்டும் இருந்தால் அது காதோடுதான் நிற்கும். எனவே, இசை என்பது வெறும் இராகமாக மட்டும் இல்லாமல் இதயத் தைத் தொடுகிற பாட்டாக இருக்கவேண்டும். அதனால்தான் வள்ளுவர்.