உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 "பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்” . என்று கூறியுள்ளார். பாடலோடு சேராத பண்ணால் என்ன நன்மை இருக்கமுடியும், என வள்ளுவர் கேட்கின்றார்.எனவே, பண்ணும் பாட்டும் பொருந்தி வந்தால்தான், அது மிகச் சிறப் பாக இருக்கும் என்பது வெளிப்படும். இதுதான். இந்தத் தமிழ் இசைச் சங்கத்தின் குறிக்கோள். இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வள்ளுவர் உணர்ந்து பாடியுள்ளார். பாட்டுக்கே தலைமை இடம் இசையில் பாட்டுத்தான் தலைமை தாங்கவேண்டும். ஏனைய இசைக்கருவிகள் எல்லாம் துணையே. அந்தப் பாட் லைத் துணைக் கருவிகள் அழுத்திவிடக் கூடாது. இப்போது இந்த மெல்லிசையில் பாடலை மற்றக் கருவிகள் அழுத்திவிடு கின்றன. தமிழிசையில் பாடலுக்குத்தான் தலைமை. மற்றவை பாட லுக்கு அணிவகுத்து வரவேண்டும். இதனைக் கம்பனே, "பருந்தொடு நிழல் சென்றன்ன இயலிசைப் பயன் துய்ப் பாரும் என்று குறிப்பிடுகின்றான். இங்கே பருந்துதான் முக்கியம், நிழல் பருந்தினைத் தொடர்ந்து செல்வது. இப் பருந்துபோலப் பாடல்தான் முக்கியம்; நிழலைப்போல இசை பாடலைத் தொடர்ந்து செல்ல வேண்டும். "பருந்தும் நிழல் போல் பாட்டும் எழாஅலும் திருந்துகழல் சீவகற்கே சேர்ந் தன" என்கிறார் திருத்தக்கதேவர்-சீவக சிந்தாமணியில் "பருந்தொடு நிழல் போக்கென்ன யாழ் நரம்பு இசையின் செல்ல” என்று பரஞ்சோதி முனிவரும் திருவிளையாடற் புரா ணத்தில் கூறுகின்றார். "பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்"என் கிறார் சுந்தரர். "சிந்தையால் அளவுபடா இசைப்பெருமை செயலளவில் எய்துமோ?" என்று சேக்கிழார் சொல்கின்றார். "பாடவேண்டும் நான் போற்றி நின்னையே,பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும்." என்று மணி வாசகர் பாடியுள்ளார். உள்ளத்தைப் பாட்டுத் தொடவில்லை என்றால், எங்கே நைந்து உருகமுடியும்.