35 "வாயினால் பாடி மனத்தால் சிந்திக்க' என்று ஆண்டாள் பாடியுள்ளார். எனவே மனத்தால் சிந்திக்கிற அளவுக்கு இசை இருக்கவேண்டும். "இன்ப வெள்ளத்தினிடை மூழ்கி நின்ற இன்னிசை வண்டமிழ் மாலை பாட" என்று சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தர்" என்று சுந்தரர் போற்றுகின்றார். இவ் வாறு சுந்தரர் பாடியதற்குப் பின்னும், இன்னும் பலர் இக் கருத்தை ஏற்கவில்லை என்றால், என்ன சொல்வது? கம்பர். சேக்கிழார், மணிவாசகர், ஆண்டாள் முதலியோர் பாடிய பாடல்களினால் தமிழிசை எவ்வளவு சிறந்து உயர்ந்து விளங்கு கிறது என்பதைக் காணலாம். புதுமை மலர வேண்டும் தமிழிசைப் பாடல்களில் புதுக்கருத்துக்கள் இடம்பெற வேண்டும். தன்னில் ஊறும் நல்லூற்றுக் கவிஞர்கள் தமிழில் தோன்றவேண்டும். நூறு ஆண்டுகளாகப் பாடிய பாடலையே பாடக்கூடாது. நாட்டுக்கு, மனித சமுதாயத்துக்கு ஏற்ற உயர்ந்த கருத்துக்களை - ஈவு - இரக்கம் -அன்பு-உயர்வு-- மேன்மை முதலிய கருத்துக்களை - உள்ளத்தில் பதியுமாறு இசையுடன் பாடவேண்டும். கருத்துக்களை இதயத்தில் பதிய வைத்துக் கொள்ளுதற்கு இசை பயன்தரவேண்டும். வாட்ட முற்று, வருத்தமுற்று வறுமையில் உழன்றுகொண்டிருப்பவர் களைச் சிறிது நேரமாவது மகிழ்விப்பது இசைதான். இதுதான் வறியவர்களுக்குப் பொழுதுபோக்க மலிவான சரக்கு. நல்ல இசைக்கு எடுத்துக்காட்டு என்னவென்றால், ஒருவன் பாடிக் கொண்டே வரும்போது அவனைப்போலப் பாடவேண்டும் என்று கேட்பவன் நினைக்கவேண்டும். ஆனால் அவ்வாறு பாடமுயற்சிக்கும்போது பாடமுடியாமல் போகவேண்டும். அதுதான் சிறந்த இசைக்கு எடுத்துக்காட்டு. அவ்வாறு பாட முடியாதபோதுதான், அதனைப் பாடியவன் நம்மிலிருந்து வேறுபட்டு எங்கோ போய் நிற்பதை நாம் உணர்கிறோம்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/37
Appearance