உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சென்னையில் இசை வெள்ளம் சென்னையில் இருக்கிற அளவுக்கு இசைச் சங்கங்கள் கலைச் சங்கங்கள் பம்பாயிலோ, கல்கத்தாவிலோ, டெல்லி யிலோ இல்லை. அதனால்தான் அங்கெல்லாம் மனிதத் தன்மை வளரவில்லை. அங்குள்ளவர்கள் இயந்திரம்போல் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் மானம் காக்கும் கலைகள் நாடெங்கும் இசையைப் பரப்புவது நாதசுரம்தான். விழாக்களிலெல்லாம், கோயில்களிலெல்லாம். மேடைகளி லெல்லாம் இசையைப் பரப்புவது நாதசுரம்தான். இத்தகைய கலையை வளர்க்கும் இசை அரங்குகள் தமிழ்நாடு எங்கும் தோன்றவேண்டும். இந்த வகையிலேதான் தமிழ் இசைச் சங்கம் அரும்பாடு பட்டுக்கொண்டு வருகிறது. இந்தச் செல்வத்தை நாம் இழக்கக் கூடாது. வேறு எந்த வகையிலும் நாம் உலகத்துடன் போட்டிபோட இயலாது. பொருளா தாரத்திலோ, அறிவியலிலோ, பொறியியலிலோ, தொழில் நுட்பத்திலோ போட்டிபோட இயலாது. எங்களிடத்தில் உள்ள தமிழ் இசையைப் ஆனால், போன்ற இசை உங்களிடத்தில் உண்டா என்பதில் நாம் போட்டிபோட இயலும். அந்தக் கேள்வியால்தான் நாம் தலைநிமிர்ந்து நிற்கமுடியும். 'எங்களிடம் இருக்கும் நாட்டியத்தைப்போன்ற சிறந்த கலை உண்டா? திருக்குறள் போலச் சிறந்த இலக்கியம் உண்டா?' என்று இறுமாந்து கேட்கமுடியும். கலைவாணர் அவர்கள் இங்கே இருக்கிறபொழுது ரஷ்யாவிலிருந்து கலைஞர்கள் இங்கே வந்தார்கள். அவர் களை அழைத்துச்சென்று பல்வேறு காட்சிகளைக் காட்டச் சென்ற கவைவாணர், ஒரு திரைப்படப் படப்பிடிப்பு நிலையத் துக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அந்த ரஷ்யக் கலைஞர்கள் ஒவ்வொரு பொருளையும் பார்த்து அவை எந்த நாட்டுக்குரியன என்று கேட்டார்கள். கலைவாணர் ஓவ்