என்று 37 வொரு பொருளும் இன்ன இன்ன வெளிநாட்டிலிருந்து வந்தன சொல்லிக்கொண்டு சென்றார். முடிவாக அவர் களைப் பார்த்து இந்த நான்கு சுவர்களும் எங்களுக்குச் சொந்தம்; காரின் டயரில் இருக்கும் காற்று எங்களுக்குச் சொந்தம் என்று கூறினாராம். எனவே, உலகத்தோடு வேறு வகைகளில் நாம் போட்டியிடலாகாது. ஆனால், நம்முடைய கலைகள் இன்றைக்கும் ஈடு இணையற்றதாக விளங்குகின்றன. நம்முடைய கலைகளை மீறிய கலைகள் இன்னும் வளர் வில்லை. அந்தச் சிறப்புக்குரிய தமிழைப்பாடி நாட்டுக்கு நல்ல தொரு நிலைமைகளையெல்லாம் கொண்டுவந்து சேர்க்கும் பெரும் பொறுப்புக்களை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவற்றை மக்களுடைய உள்ளத்தில் பதியவைக்கிற அளவுக்கு சையை வளர்க்கவேண்டும். முயற்சி திருவினையாக்கும் அழகையும் புதுமையையும் பாடலில் குழைத்துத் தர வேண்டும். தென்றலில் உள்ள அழகைப் பாரதிதாசன் "பொதிகை விட்டெழுந்து" என்று தொடங்கி, மிகச் சிறப் பாகவும் நளினமாகவும் பாடியுள்ளார். "பொதிகைமலை பண் விட்டெழுந்து சந்தனத்தின் புது மணத்தில் தோய்ந்து, பூந்தாது வாரி, நதி தழுவி, அருவியின் தோள் உந்தித் தெற்கு நன்முத்துக் கடல் அலையின் உச்சி தோறும் சதிராடி, மூங்கிலிலே எழுப்பித் தாழை யெல்லாம் மடற்கத்தி சுழற்றவைத்து, முத்துதிர்த்துத் தமிழ கத்தின் வீதி நோக்கி, அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல் அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன் சிந்தை உடல் அணு ஒவ்வொன்றும் சிலிர்க்கச் செல்வம் ஒன்று வரும்; அதன்பேர் தென்றற் காற்று.' இத்தகைய பாடல்களையெல்லாம் இசையோடு இழைத் துத் தரவேண்டும். முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினை யாக்கும். தமிழிசைக்காக முப்பத்தெட்டாவது ஆண்டு விழா
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/39
Appearance