உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பாலைவனம் சோலைவனம் ஆகுமா? "பாலைவனம் என்று சோலைவனம் ஆகுமா? கேட்டால், “ஆகும்!" என்று துணிவோடும், தெளிவோடும், உறுதியோடும் விடைபகர ஒருவர் கிளம்பியிருக்கிறார். "ஒரு மனிதன் தன் உடலில் மூன்றில் ஒரு பகுதி தோலை இழந்துவிடுவானேயானால், அவன் இறந்துபடுகிறான். ஒரு மரம் மூன்றிலே ஒரு பகுதி பட்டையை இழக்குமேயானால், அது அழிந்துபடுகிறது. உலகம் தான் கொண்டிருக்கும் மரங்களில் மூன்றில் ஒரு பகுதியை இழக்குமேயானால், அது பாழ்பட்டுவிடும் என்பது அவரது சிறப்புமொழியாகும். வட அவர்தான் பாப்பு போக்கர் (Barpe Baker) என்ற ஆங்கிலேயர் ஆவார். அவருக்கு வயது 65. அவர் ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனத்தைச் சோலைவனம் ஆக்கமுடியும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் ஒரு உலகப் புகழ்பெற்ற காட்டியல் வல்லுநர் (Foerstry Exbert) "மரங்களில் மனிதர்கள்" (The Men of the Trees) என்ற பெயரமைந்த மரம் விரும்பிகளின் அமைப்பு ஒன்றை நிறுவி, அதனைச் சிறப்பாக நடத்திவருகிறார். சகாராப் பாலைவனம் மேலும் மேலும் வளராமல் தடுக்கவும், அதனைச் சிறிது சிறிதாகச் சோலைவனமாக ஆக்கவும், 'சகாரா மீட்புக்குழு என்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவர் ஏறத்தாழ நாற்பது நாடுகளின் ஒத்துழைப்பையும் பொருளுதவியையும் நாடியுள்ளார். என்