உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 பாலைவனத்தைச் சோலைவனமாக்குவது மிக்க பைத்தியக் காரத்தனம் என்று பலர் எள்ளி நகையாடுகிறார்கள். என்றாலும், அவர், தமது முதிர்ந்த வயதிலும், ஒரு பள்ளிச் சிறுவன்போல உணர்ச்சியோடும் ஊக்கத்தோடும் உழைத்து வருகிறார். அவர் சென்ற நாற்பது ஆண்டுக்காலமாக அறிவியல் அறிஞர்களோடும், அரசாங்க அலுவலர்களோடும் போரிட்டுத், தம் கொள்கையை ஏற்குமாறு அவர்களை வற்புறுத்தி வந்துள்ளார். தோழர் பேக்கரின் சகாராக் கனவு களில் சில, இன்னும் சில ஆண்டுகளில் நிறைவேறக்கூடும் என்று, இப்பொழுது அவர்களில் பெரும்பாலோர் ஒப்புக் கொண்டுள்ளனர். இன்றைய உலகைப் பெரிதும் அச்சுறுத்தி வருவது அணுக் குண்டோ, நீர்வளிக்குண்டோ அல்ல. பாலைவனப் பெருக்கந் தான்' என்று தோழர் பேக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகின் நிலப்பகுதியில் 10இல் 3பகுதி (3/10) பாலைவன மாகக் காட்சி அளிக்கின்றது என்று அவர் தெரிவிக்கிறார். காடுகளை அழித்து நாடாக்கிக் கொண்டுவரும் பழக்கந்தான், மனிதனால் உண்டாக்கப்படும் பாலைவனத்தின் அளவைப் பெருக்கிக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ் சாட்டியுள்ளார். 1850ஆம் ஆண்டு வரையில் உலகில் பயிராகும் பகுதியில் ஆறில் ஒரு பங்கு (1/6) மனிதமுயற்சியால் பாலையாக்கப் பட்டது என்றும், 1850 இலிருந்து 1950 வரையிலுமுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் மேற்கொண்டு பன்னிரண்டில் ஒரு பகுதி (1/12) பாலையாக்கப்பட்டிருக்கிறது என்றும், தோழர் பேக்கர் குறிப்பிடுகிறார். வட ஆப்பிரிக்காவின் நாகரிக வளர்ச்சி அதன் காடு களோடு சேர்ந்து அழிந்துபட்டது எனலாம் என்று அவர் கூறுகிறார். இன்றைய நிலையில் சகாராப் பாலைவனத்தை எடுத்துக் கொண்டால், அது ஐக்கிய அமெரிக்காவைவிட, ஆத்திரேலி யாவைவிடப் பெரிதாகும். அது சுமார் 2000 மைல் நீளத்திற்கு 21.13