உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஆண்டு ஒன்றுக்கு 30 மைல் தொலைவுக்கு அகன்று கொண் டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மரம் பயிராக்குதலை மிகப்படுத்துவதன் மூலமும், புதிய புதிய ஏரிகள் ஆறுகள் ஆகியவற்றைக் காணுவதன் மூலமும் மட்டுமே, உணவுப்பொருள் விளையும் பகுதியைப் பெருக்க முடியும் என்று தோழர் பேக்கர் கூறுகிறார். அவர் 1952ஆம் ஆண்டில் சகாராப் பாலைவனம் முழுதும் விரிவாகச் சுற்றிப் பார்த்து ஆராய்ந்தறிந்தபோது, சகாராப் பாலைவனத்தை மெல்லமெல்லச் சோலைவனம் ஆக்குவது இயலக்கூடிய ஒரு செயலே என்பதைக் கண்டார். அவர் அந்த ஆண்டில் சுமார் 9000 மைல்கள் சுற்றிப் பார்த்து மரம் பயிராக்குவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். தோழர் பேக்கரும் அவரது நண்பர்களும் நூற்றுக்கணக் கான டன்கள் விதைகள் கொண்டுபோய் 'ஓயசீசு' என்னும் பாலைவன நீருற்றுக்களுக்கு அருகில் அவற்றை விதைத்தனர். அவை இப்பொழுது மரங்களாக வளர்ந்துள்ளன. மேகமண்டலத்தில் மரங்களால் வீசப்பட்ட குளிர்ந்த காற்றுப் பட, சிறிதளவு மழை பொழிந்து, ஆங்காங்கு நீரூற்றுக்கள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. ஒரு காலத்தில் மரங்கள் இருந்து, அவை பட்டுப்போகவே குளிர்ந்த காற்று வீசுதல் குறைந்து, மழை பொழிதல் நின்று, காடு பாலைவனமாக மாறிவிட்டது என்பது தோழர் பேக்கரின் கருத்தாகும். சோலைகளின் அளவு விரியவிரிய மழையும் மழையும் பெருகுகிறது. மழை பெருகப்பெருக நீர் ஊற்றுக்கள் ஏற்படுகின்றன.நீர் ஊற்றுக்கள் ஏற்பட ஏற்பட மரம் பயிராகும் பகுதியும் பெருகுகிறது. இப்படியாகப் பாலைவனத்தைச் சோலைவன மாக்கும் முயற்சியில் அவர் அரும்பாடுபட்டு வெற்றிகண்டு வருகிறார். தோழர் பார்ப்பு பேக்கர் உலகிற்கு ஆற்றியுள்ள தொண்டு அளப்பரிய தொண்டாகும். இன்றைய உலக நாகரிகம் மரங்களை அழிப்பதற்குக் காரணமாக இருக்கிறதேயல்லாமல்,