உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மரங்களை வளர்ப்பதற்குக் காரணமாக இருக்கவில்லை. மரம் வளர்க்கும் உணர்ச்சியைப் பெரும்பாலோர் உள்ளத்தில் வளர்க்கத் தோழர் பேக்கர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. பேக்கர் மட்டுமல்லாமல், அவரது பரம்பரையே மரம் வளர்ப்பதில் மிக்க பற்றுக்காட்டி வந்ததாகும். இங்கிலாந்தில் ஆம்சயர் (Hampshire) என்ற இடத்தில் அவரது குடும்பம் தலைமுறை தலைமுறையாக மரம்வளர்த்தலைப் போற்றிப் பாதுகாத்துவருகிறது. இவருடைய பாட்டனார் ரூ.1,56,000 பெறுமான மரங்களை, சுமார் 800 ஏக்கர் நிலத்தில் பயிராக்கி வளர்த்து வந்தாராம். பேக்கர் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் படித்தபிறகு, முதல் உலகப் பெரும்போரில் ஈடுபட்டிருந்தார்.1920ஆம் ஆண்டில் காட்டியல் கல்வியியலில் தேர்ச்சிபெற்று, அதற்கான சான்றுத்தாளும் பெற்றார். அவர் 1924இல் "மரங்களின் மனிதர்கள்" என்ற பெயரமைந்த சங்கம் ஒன்றை நிறுவினார். அந்தச் சங்கத்தில் உறுப்பினராவோர் ஆண்டு ஒன்றுக்குச் குறைந்தது பத்து மரங்களையாவது உற்பத்தியாக்கவேண்டும். பேக்கரின் முயற்சியைப் பின்பற்றிய சுமார் 12,000 பேர்கள் ஓராண்டுக் காலத்தில் சுமார் 90,000 மரங்களைப் புதிதாகப் பயிராக்கியிருக்கின்றனர். அந்தச் சங்கத்தில், பிரிட்டனில் மட்டும் சுமார் 3,000 பேர்கள் முக்கிய உறுப்பினர்களாகி யிருக்கின்றனர். அந்தச் சங்கத்திற்கு உறுப்பினர்கள் 44 நாடுகளில் பரவியிருக்கின்றனர். காலங்களில், அவர் 1930ஆம் ஆண்டினை ஒட்டிய நைசீரியாவிலும், பாலத்தீனத்திலும் காடுகளை உண்டாக்கும் பணியில் மிக மும்முரமாக ஈடுபட்டிருந்தார். பிறகு உலகம் முழுவதும் சுற்றி ஆங்காங்கு மரம் பயிராக்க வேண்டியதன் இன்றியமையாமை பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றியும், ஏடுகளில் எழுதியும், ஒலிபரப்புகள் செய்தும் வந்தார். அவர் அமெரிக்கா, கனடா, ஆத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, மரம் வளர்க்கும்