இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44 உணர்ச்சியை ஊட்டியும், காடுகளை உற்பத்தியாக்கவேண்டிய தன் இன்றியமையாமையை உணர்த்தியும் அரும்பணி ஆற்றி வந்தார். அவர் வட அமெரிக்காவில் 17,000 மைல்கள் சுற்றி, ஆங்காங்கு காடுகள் வளர்ப்பதற்கான திட்டங்களைத் தீட்டி, அமெரிக்கக் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார். அமெரிக் காவின் சிற்சில பாலைவனப் பகுதிகளைச் சோலைவனமாக்க அந்தத் திட்டம் பெரிதும் பயனளிப்பதாக இருந்தது. இப்பொழுது அவருக்கு வயது 66. என்றாலும், அவர் இன்னமும் சளைக்காமல் உழைத்து வருகிறார். சகாரப் பாலைவனத்தைப் பச்சைச் சோலைவனமாக்கும் பணியில் தான் இப்பொழுது அவர் ஈடுபட்டிருக்கிறார்; அதில் அவர் வெற்றி கண்டும் வருகிறார். காடு திருத்தி நாடாக்கும் காலம் ஒன்று இருந்தது; இப் பொழுது நாடு திருத்திக் காடாக்கும் நிலை ஏற்பட்டிருக் கிறது. [மன்றம் 1-7-55]