உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. குத்துச் சண்டை உடற்கல்வியின் ஒரு பிரிவாக இன்று பல்வேறு நாடுகளி லுமுள்ள வாலிபர்கள்பயிற்சிபெறும் குத்துச்சண்டை(Boxing), தொன்றுதொட்டு வளர்ந்துவந்திருக்கும் ஒரு கலையாகும். நாகரிகமற்ற காலத்தில் குத்துச்சண்டை ஒரு தற்காப்பு முறை யாகக் கொள்ளப்பட்டு, நாகரிகம் மலர்ந்து மனிதர்கள் நாடு நகரங் கண்டு வாழ முற்பட்ட காலத்தில், மனிதனின் ஆற்றலை யும் உடல்வலிவையும் வெளிப்படுத்தி நிற்கும் ஒரு கலையாக மாறியது. உலகின் எந்தப்பகுதியிலிருந்து குத்துச்சண்டை முதன் முதல் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியது என்று திட்ட வட்டமாக நாம் கூறமுடியாது. முதல்முதல் எங்கெங்கு மனிதன் தோன்றி, மனிதர்கள் பெருகினார்களோ அங்கெல் லாம் தற்காப்பு முறையாகக் குத்துச்சண்டை தோன்றி யிருக்கலாம். காலச் குத்துச்சண்டையை ஒரு கேளிக்கைச் சாதனமாகப் பழங் சுமேரியர்கள் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் போற்றி வளர்த்திருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் மூலம் தெரியவருகின்றது. பற்றிய பழங் கிரேக்க நாகரிகத்தில் குத்துச்சண்டை குறிப்புகள் பெருமளவிற்குக் கிடைத்திருக்கின்றன. வலிவு பெற்ற ஏதென்சுநகர வாலிபர்கள் பொறுக்கியெடுக்கப்பட்டுக் குத்துச்சண்டைப் போட்டியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.