உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 போட்டியில், வீரர்கள், ஒருவர் மூக்கு மற்றவர் மூக்குமீது தொட, ஒருவர் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கும்படியாக உட்கார வைக்கப்படுவார்களாம். ஒரு குறிப்பிட்ட அறிவிப் பின்போது, இரு வீரர்களும் ஒருவரை யொருவர் தத்தம் கைகளால் குத்திக்கொள்ள முற்படுவார்களாம். பின், குத்துச்சண்டை வீரர்கள் தங்கள் கைகளில் உறைகளை மாட்டிக்கொண்டு போரிடும் வழக்கம் ஏற்பட்டது. உறை களில் உலோகத்தாலான சிறுசிறு முட்கள் பொருத்தப்பட் டிருந்ததால், குத்துச்சண்டையின் விளைவுகள் பயங்கரமாகத் தோன்றியது. வாய் கிழிய, கண்கள் துளைபட, மூக்கிலிருந்து குருதி கொட்ட, மண்டை சிதற, இப்படிப் பல கோரக் காட்சி கள் ஏற்பட்டன. அநேகமாகப் போட்டியிடும் இருவருமே இறந்துவிடுவார்கள். இதன் பிறகு கையுறைகளின் முட்கள் நீக்கப்பட்டு மெதுவானதாக ஆக்கப்பட்டாலும், குத்துச் சண்டையின் விளைவாக இறக்கும் வாலிபர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ரோமானியர் கிரேக்கத்தை வென்று தம் ஆதிக்கத்தை நிலைநாட்டியபோது, குத்துச் சண்டை வீரர்களின் கையுறைகள் தோலினால்தான் இருக்க வேண்டும் என்று ஏற்பட்டது என்றாலும், போட்டியின் கொடூர விளைவு மறையவில்லை. அப்பொழுதுள்ள குத்துச்சண்டைப் போட்டிபோல் இப்போது கிடையாது. அப்போது வீரர்கள் போட்டியில் இறங்கினால் ஒரு வீரன் வெற்றியடையும்வரை போட்டி நடைபெறும்;. தோல்வியடையும் வீரன் எழமுடியா நிலையில் குற்றுயிரும் குலையுயிருமாக வீழ்த்தப்படுவான். நம் தமிழ்நாட்டிலும் குத்துச்சண்டை வழக்கிலிருந்தது. பண்டைத் தமிழகத்தில் குத்துச்சண்டை யிருந்தது பற்றிய சில குறிப்புகள் புறநானூற்றுப் பாடல்களில் காணப்படு கின்றன. ஆனால் குத்துச்சண்டையில் கோரக்காட்சிகள் நேரிடாதபடி நாளடைவில் குத்துச்சண்டையின் முறைகளை மாற்றிவிட்டனர். அதுவே இன்று நாம் அழைக்கும் மற்போர் (Wrestling) என்பதாகும். மற்போர் நம் நாட்டிலிருந்து குத்துச்சண்டையிலிருந்து பிரிந்த ஒரு கலையாகும். மற்போரில்