47 போட்டியிடும் வீரர்கள் ஒருவரையொருவர் குத்திக்கொள் ளாமல், ஒருவரையொருவர் தமது உடல் வலிவால் வீழ்த்தித் தரையில் முதுகு படும்படி செய்துவிட்டால் அதுவே வெற்றி யின் அறிகுறியாகும். ஐரோப்பிய நாடுகளில் வழக்கிலிருந்த குத்துச்சண்டை முறைகளில் பலகாலம் வரை எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை. பல நாடுகளில் வீரர்கள் கையுறையில்லாமலேயே போரிட்டனர். இப்பொழுது குத்துச் சண்டை வீரர்கள் அணியும் தோலினாலான கையுறை 18ஆம் நூற்றாண்டில் சாக் பிராட்டன் (Jack Broughton 1705-89) என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டதாகும். இவரே ஆங்கிலக் குத்துச்சண்டை முறைக்குத் தந்தையாவார். புதிய கையுறைகளினால் போட்டி களில் கொட்டப்படும் குருதி பெருமளவிற்குக் குறைந்தது. ஆங்கிலக் குத்துச்சண்டை முறைக்கு அப்போது புகழ் பெற்ற ஆசிரியராக சான் சாக்சன் (John Jackson) என்பவர் விளங்கினார். அவர் குத்துச்சண்டையில் பல புதிய அறிவியல் முறைகளைப் புகுத்திக் குத்துச்சண்டையை யாவரும் கண்டு போற்றத்தக்க வகையில் மாற்றினார். அவருடைய மாணாக்கர் களில் லார்டு பைரன் (Lord Byron) என்ற கவிஞரும் ஒரு வராவர். ஆனால் குத்துச்சண்டையில் கோரவிளைவுகள் நிகழா வண்ணம் பல விதிகளை ஏற்படுத்தி, குத்துச்சண்டையைக் கேளிக்கைக்குரிய ஒரு நல்ல சாதனமாக ஆக்கச் சென்ற நூற்றாண்டின் இறுதியில்தான் முயற்சி யெடுக்கப்பட்டது. 1865இல் இங்கிலாந்தில் குத்துச்சண்டைக்கு புதிய விதிகள் தயாரிக்கப்பட்டன. இதற்கு குயீன்சுபெரி விதிகள் (Queensberry Rules) என்று பெயர். இந்த இந்த விதிகளே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு இன்று எல்லா நாடுகளிலும் குத்துச்சண்டையில் கடைபிடிக்கப் படுகிறது.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/49
Appearance