பதிப்புரை அருமைமிகு செந்தமிழும், ஆதிப்பழைய தமிழினமும், சீரோடும் சிறப்போடும் என்றும் உயர்வோடே நின்று செழிக்கவேண்டும் என்பதிலேயும், பெரும்புகழ்த் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளையும், இலக்கிய இலக்கண ஏழில்களை யும், பேருலகெல்லாம் வியந்துபோற்றிக் கொள்ளல்வேண்டும் என்பதிலேயும் அளவில்லாப் பேரார்வம் கொண்டவராக. அந்தப் பெரும்பணிகட்கே தம்மை முற்றமுழுக்கவும் ஈடுபடுத்திக் கொண்டவராக விளங்கிய தமிழ்க் காவலருள் குறிப்பிடத்தகுந்த ஒருவராக விளங்குபவர் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் ஆவார்கள். தாம் கற்பனவும் கேட்பனவும் காண்பனவும் தமிழினத் துக்கே உதவியாக அமையவேண்டும் என்பதிலேயும், தமிழு ணர்வும் தமிழினப்பற்றும் ஒவ்வொரு இதயத்திலேயும் நிரம்பிப் பொங்குதல் வேண்டுமென்பதிலேயும், கரையிலாக் காதல்மிகுந்த நாவலர் அவர்கள், தம்முடைய பேச்சுத் திறனாலும் எழுத்துத்திறனாலும் தொண்டின்திறனாலும் பல்லாண்டுகளாக ஆற்றிவந்துள்ள அரும்பணிகள் மிகமிகப் பலவாகும். 'நாவலர்' என்றே நாடெலாம் புகழ்படைத்த இவரின் நாவன்மை, அனைவர் நெஞ்சங்களையும் வென்று விளங்கும் சொலற்கரிய சொல்லாண்மையும் ஆகும். நாவலரவர்களின் சிந்தையரங்கிலே எழுந்து, நாட்டினரை மகிழ்விக்கும் வண்ணம் மன்றம் இதழிலேயும் மற்றும் இதழ்களிலேயும் தோன்றி, எண்ணற்றோருக்கு அக்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/5
Appearance