உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இப்பொழுது குத்துச்சண்டை ரவுண்டு (Round) என்று பல பிரிவுகளாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ரவுண்டும் மூன்று நிமிட நேரம் நடைபெறும். வீரர்கள் குறிப்பிட்ட இடங்களில் தான் குத்தவேண்டும். இடம் தவறிக் குத்தினால், குத்தும் வீரன் பேரில் குறைகூறப்பட்டு, வெற்றி எண்கள் குறைக்கப் படும். சண்டையின்போது ஒரு வீரன் கீழே விழுந்துவிட்டால் போட்டியைக் கண்காணிக்கும் நடுவர் (Umpire) ஒன்று, இரண்டு, மூன்று...என்று பத்துவரை கூறிக்கொண்டே செல்வார். அதற்குள் விழுந்த வீரன் எழுந்திருக்கவேண்டும். இல்லையானால், அவன் தோல்வியுற்றவனாகக் கருதப் படுவான். குத்துகளுக்குத் தக்கபடி "மார்க்குகள்' தனித் தனியே அமர்ந்திருக்கும் நடுவர்களால் குறிக்கப்பட்டு, வெற்றி வீரன் யார் என்பதைப் போட்டி முடிவடைந்ததும் தெரிவிப்பர். வீரர்களின் எடை சமநிலையில் இருக்கும் வகையில் எடைக்குத் தகுந்தாற்போல், போட்டிகள் பலவகையாகப் பிரிக்கப்பட்டுப் போட்டியிடும் வீரர்களின் எடையில் ஏற்றத் தாழ்வு அதிகமில்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. இவ்விதமாகக் குத்துச்சண்டையின் விதிகள் வெகுவாக மாற்றப்பட்டு, இன்று எல்லா நாடுகளிலும் கற்றுக்கொள்ளப் படும் உயர்கல்விக் கலையாக விளங்குகின்றது.