5. ஆங்கிலமா? இந்தியா? ஆங்கிலம் அன்னிய மொழி-ஆகவே அது இந்தியத் துணைக்கண்டத்தின் அரசியல்மொழியாகவோ அல்லது பொது மொழியாகவோ இருப்பதற்குத் தகுதியுடையதல்ல. இந்திதான் இந்தியாவின் அரசியல்மொழியாகவும், பொதுமொழியாகவும் இருப்பதற்குத் தகுதியுடையது. காரணம், அதுதான் இந்தியா வின் தேசீயமொழியாகவும் பெருவழக்குடைய மொழியாகவும் இருந்து வருகிறது." என்னும் கருத்துப்பட, வடநாட்டுக் காங்கிரசுத் தலைவர் களும், வடநாட்டு இந்திமொழி வெறியர்களும், வடநாட்டிற்கு அடிமைபோன தென்னாட்டுக் காங்கிரசுக்காரர்களும் ஓயாமல் ஒழியாமல் பேசிவருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தும், தமிழகம்- ஆந்திரம்- கருநாடகம் - கேரளம் ஆகிய நான்கும் அடங்கிய திராவிடத் தைப் பொறுத்தும், இந்தி எக்காரணத்தைக் கொண்டும் தேவைப்படாத-வேண்டப்படாத - அவசியமற்ற - மொழி என்பதை, நாம் பலமுறை வற்புறுத்திச் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். ஆங்கிலம் எந்த அளவுக்குத் தமிழகத்துக்கும் திராவிடத் துக்கும் அன்னிய மொழியோ, அதே அளவுக்கு அன்னிய மொழிதான் இந்தியும். வங்காளம், மகாராட்டிரம், பஞ்சாப்பு, சிந்து ஆகிய பகுதிகளை எடுத்துக்கொண்டாலும், ஆங்கிலம் அவைகளுக்கு
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/51
Appearance