உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 எந்த அளவுக்கு அன்னிய மொழியோ அந்த அளவுக்கு இந்தியும் அவைகளுக்கு அன்னிய மொழியே யாகும். - ஆங்கிலம்-இந்தி ஆகிய இரண்டு அன்னிய மொழிகளில் எந்த அன்னிய மொழி, தமிழகம், திராவிடம் போன்ற பகுதி களுக்கு வேண்டப்படுவது - பயன்படுவது - இன்றியமையா ததாகத் தேவைப்படுவது ஆகும் என்றால், ஆங்கிலந்தான் ஆயிரமாயிரம் தடவைகள் வேண்டுமானாலும் குன்றின்மீது ஏறிநின்று உரத்த குரலில் கூவலாம். என்று . இந்தி மொழி வெறியர்களும், வடநாட்டுக் காங்கிரசுத் தலைவர்களும் ஆங்கிலத்தை அறவே ஒதுக்கிவிட வேண்டும் என்று கூறுகிறார்களா என்று பார்த்தால், அப்படியும் இல்லை. அகில உலகப் பொதுமொழி என்ற முறையில் ஆங்கிலத்தை இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எல்லோரும் படிக்கவேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இந்தியத் தேசிய மொழியாகவும் - இந்தியப் பொதுமொழியாக வும்-இந்திய அரசியல் மொழியாகவும் இந்தி விளங்க வேண்டும்; அகில உலகப் பொதுமொழியாக ஆங்கிலம் இருக் கட்டும்; மேற்கண்ட வகைகளுக்காக இந்த இரண்டு மொழிகளை யும் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள அனைவரும் தங்கள் தங்கள் தாய்மொழி- வட்டாரமொழி ஆகியவற்றோடு கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்து கின்றனர். தமிழகத்திலுள்ள தமிழர்களுக்கு ஆங்கிலம் - இந்தி என்ற இந்த இரண்டு மொழிகளும் இன்றியமையாதனவா என்று ஆராய்ந்து பார்த்தால், ஆங்கிலந்தான் இன்றியமையாது வேண்டப்படும் ஒன்றாக இருக்குமேயெழிய, இந்தி எந்த வகை யிலும் வேண்டப்படுவதாக இருக்காது என்பதை உணரலாம். தமிழகத்தைப் பொறுத்துத் தமிழை முன்னிறுத்திக் கூறப் படும் காரணங்கள், ஆந்திரம் - கருநாடகம் - கேரளம் ஆகிய வற்றைப் பொறுத்து, முறையே தெலுங்கு - கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளை முன்னிறுத்திக் கூறுவதற்கும் ய