பொருந்தும் 51 என்பதை இங்கு அறிந்து கொள்ளலாகும். அதாவது தமிழகத்தின் எடுத்துக்காட்டு ஆந்திரம்-கருநாடகம் கேரளம் ஆகிய பிற திராவிடப் பகுதிகளுக்கும் பொருந்தும் என்க. தமிழகத்தில் அரசின் அலுவல்கள்: ஊராட்சிமன்ற- நகராட்சிமன்ற -மாவட்ட ஆட்சி மன்ற-சட்டமன்ற நடவடிக் கைகள்: பள்ளி-கல்லூரி—பல்கலைக்கழகப் படிப்பு, உள் நாட்டு அஞ்சல்- தந்திப் போக்குவரத்து, உள்நாட்டு வாணிகம் இன்ன பிறவெல்லாம் தமிழிலேயே நடைபெறலாம்- நடை. பெறமுடியும். ஆனால், உலகத்தின் பிற பகுதிகளோடு அரசியல் தொடர்பு, வாணிகத் தொடர்பு, பண்பாட்டுத் தொடர்பு ஆகியவற்றைக் கொள்ளவும், உலகில் வளர்ந்துள்ள அறிவியல் அறிவைப் பெறவும் தமிழ் இன்றைய நிலையில் பயன்படுவதாக இல்லை. தமிழ் நிறைவேற்றித் தராத தன்மைகளை நிறைவேற்றித்தர வேறு ஒரு மொழி தமிழர்க்கு முக்கியமாகத் தேவைப்படும். இன்றைய நிலையில் தமிழ் நிறைவேற்றித் தராத தன்மைகள் அத்துணையையும் இந்தி நிறைவேற்றித் தருமா என்றால், தராது; ஆனால் ஆங்கிலம் முழுக்க முழுக்க நிறைவேற்றித் தரும். இந்தியால் எதிர்பார்க் கப்படும் பலன்களோடும், இந்தியால் நிறைவேற்றப்படமுடியாத பலன்களையும் சேர்த்து நிறைவேற்றித்தரும் தகுதியை ஆங்கிலம் போற்றத்தகுந்த அளவுக்குப் பெற்றிருக்கிறது. எனவே, தமிழுக்கு உதவியாக ஆங்கிலம் மட்டும் இருந்தால் போதும்; வேறு எந்த மொழியின் உதவியும் தேவையில்லை; வேறு எந்த மொழியும் முழுப்பலனை அளிக்க வல்லதல்ல. இந்தி, இலக்கண இலக்கியச் செறிவுடையது -உலகத் தொடர்பு கொள்ளச் செய்வது - அறிவியல் அறிவை வளர்ப்பது - உலக வாணிகத் தொடர்பை உண்டுபண்ணுவது -நாகரிகப் பண்பாட்டுத் தொடர்பை உருவாக்குவது என்று கூறி, அதனைத் தமிழகத்தார்--திராவிடத்தார்மீது திணிக்க யாராலும் இயலாது. ஏனெனில், அந்தத் தன்மைகள் இந்தி
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/53
Appearance