52 யிடம் அறவே கிடையாது; ஆனால் ஆங்கிலத்திடம் போது மான அளவுக்கு இருக்கின்றன. இந்தி, இந்தியாவின் சொந்த மொழி, ஆங்கிலம் அன்னிய மொழி என்ற காரணத்தைக் காட்டியும் இந்தியைத் தமிழகத் தில் - திராவிடத்தில் திணிக்கமுடியாது. ஏனெனில், மேலே சுட்டிக்காட்டியுள்ளபடி ஆங்கிலம் எந்த அளவுக்கு அன்னிய மொழியோ அதே அளவுக்கு இந்தியும் தமிழர்க்கு - திராவிடர்க்கு அன்னிய மொழிதான். இந்தி வேண்டுமானால் இந்தி பேசப்படும் வடநாட்டுப் பகுதிகளுக்குச் சொந்த மொழி யாகத் திகழலாமே யொழிய, அது தென்னாட்டிற்கு ஒரு காலும் சொந்தமொழி யாகாது. இந்தி, இந்தியத் துணைக்கண்டத்தின் தேசியமொழி; எனவே அதுதான் இந்தியாவின் அரசியல் மொழியாகவும், பொது மொழியாகவும் இருக்கவேண்டும் என்று சொல்லித் தமிழர் - திராவிடர்மீது அதனைப் புகுத்த இயலாது. ஏனெனில், தமிழகத்தின் மண்ணுக்குரிய தாய்மொழி, அதாவது தேசிய மொழி தமிழேயல்லாது வேறு மொழியல்ல. அது போலவே ஆந்திரம்--கருநாடகம் - கேரளம் ஆகியவற்றின் மண்ணுக்குரிய தேசீய மொழிகள் முறையே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகுமேயல்லாது வேறு மொழி யாகாது. ஒரு மனிதனுக்கு எப்படி இரண்டு பெற்றெடுத்த தாய்மார்கள் இருக்கமுடியாதோ, அதுபோலவே ஒரு குறிப் பிட்ட வரலாற்றுமுறையில் வளர்ந்த நாட்டிற்கு இரண்டு தேசீய மொழிகள் இருக்கமுடியா. ஆங்கிலமோ அல்லது சீன மொழியோ எப்படித் தமிழகத்திற்குத் தேசியமொழி ஆகாதோ அப்படியே இந்தியும் தமிழகத்திற்குத் தேசீய மொழியாகாது; அது தமிழகத்தின் நிலத்திற்குரிய மொழி அல்ல. ' இந்தி, தமிழகத்தில் அரசியல் மொழியாக இருப்பதற்குத் தமிழைவிடப் பொருத்தமுடையது என்று சொல்லிக்கொண்டு தமிழகத்தில் நுழையமுடியாது. ஏனெனில், இந்தி தமிழைவிட லக்கண வளம், இலக்கிய வளம், சொல் வளம், பொருள்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/54
Appearance