உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வளம் ஆசியவற்றில் மிகக் குறைபாடுடைய மொழியாகும். மொழி வளர்ச்சிக்குரிய வேர்ச்சொற்கள் தமிழில் இருப்பதைப் போல் இந்தியில் இல்லை. அது வடமொழியையாவது அல்லது அரபி, பாரசீக மொழிகளையாவதுதான் தன் சொற்களுக்கு நம்பி வாழவேண்டும். தமிழகத்தின் அரசியலை நடத்தத் தமிழே போதுமானது; இந்தி அவசியமே யில்லை. தமிழகத் தில் கணக்கப்பிள்ளை பட்டாமணியாரிடம் தமிழிலேயே பேசலாம்; பட்டாமணியார் இரெவின்யூ இன்சுபெக்டரிடம் தமிழிலேயே பேசலாம்; இரெவின்யூ இன்சுபெக்டர் தாசில் தாரிடம் கலெக்டரிடம் தமிழிலேயே பேசலாம்; கலெக்டர் இரவின்யூ போர்டு மெம்பரிடம் தமிழிலேயே பேசலாம்; பிரதமக் காரியதரிசியிடம் இரெவின்யு போர்டு மெம்பர் தமிழிலேயே பேசலாம்; பிரதமக் காரியதரிசி இரெவினியூ அமைச்சரிடம் தமிழிலேயே பேசலாம்; இரெவினியூ அமைச்சர் முதலமைச்சரிடம் தமிழிலேயே பேசலாம்; இந்த அலுவலாளர்கள் பெயர்களையெல்லாம் தமிழிலேயே பேசலாம்; இந்த அலுவலாளர்கள் பெயர்களை யெல்லாம் தமிழிலேயே மாற்றியமைக்கலாம்; சட்டமன்றம் - ஊராட்சி - நகராட்சி - மாவட்ட ஆட்சி மன்றங்கள், நீதிமன்றங்கள் ஆகிய எல்லாமும் தமிழகத்தில் தமிழிலேயே நடைபெறலாம். தமிழக முதலமைச்சர் வடநாட்டோடும், பிற நாடுகளோடும் பேசு வதற்குத் தமிழ் பயன்படாது. அப்பொழுது வேறோர் மொழி தேவைப்படும். அந்த வேறோர் மொழி அகில உலகப் பொதுமொழியான ஆங்கிலமாக இருந்தால்தான் பிறநாடுகள் எல்லாவற்றோடும் தொடர்புகொள்ள முடியும். உலக நாடுகள் அனைத்தோடும் தொடர்பு கொள்ளுவதற்கு வைத்துக்கொள்ளும் ஆங்கிலத்தையே வடநாட்டோடும் தொடர்பு கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். வடநாட்டுக்காகத் தனியாக இந்தியைப் பிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் தமிழகத்தார்க்கு இல்லை. இந்தி, இந்தியாவின் பொதுமொழியாக இருப்பதற்குத் தகுதிபடைத்தது என்று கூறிக்கொண்டு, தமிழகத்தில் எட்டிப்