உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பார்க்க இயலாது. ஏனெனில், உலகப் பொதுமொழியாக விளங்கும் ஆங்கிலமே இந்தியாவின் பொதுமொழியாக விளங்கு வதற்கு, இந்தியைவிட எல்லாவகையிலும் சிறப்பும் தகுதியும் படைத்ததாக இருக்கிறது. தமிழகத்தார்-திராவிடத்தார் டோக்கியோவோடு, சாங்கையோடு, பீக்கிங்கோடு, இரங் கூனோடு, சிங்கப்பூரோடு, இலண்டனோடு, மாசுக்கோவோடு, வாசிங்டனோடு தொடர்பு கொள்ளுவதற்கு ஏற்றுக் கொள்ளு கிற ஆங்கிலத்தையே, வடநாட்டு ஆமதாபாத்தோடும், அலகாபாத்தோடும், பம்பாயோடும், கல்கத்தாவோடும், டில்லி யோடும், டார்சிலிங்கோடும் தொடர்புகொள்ளுதற்குக் கொள்ளலாமே! வடநாட்டிற்காக என்று இந்தியைத்தனியாகக் சுற்றுக் கொள்ளவேண்டிய அவசியமில்லையே! தமிழகத் தார் - திராவிடத்தார். உலகத்தொடர்பு - உலகவாணிகம் அறிவியல் ஆகியவற்றிற்காக எப்படி ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளவேண்டிய இன்றியமையாத நிலையிலிருக்கிறார் களோ, அதேபோலவே, இந்தி மொழி பேசும் வடநாட்டாரும், மராட்டியரும், பஞ்சாபிகளும், வங்காளிகளும் தங்கள் தங்கள் தாய்மொழியோடு அகில உலகப் பொதுமொழியான ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய இன்றியமையாத நிலையிலிருக்கிறார்கள். தென்னாட்டாரும் வடநாட்டாரும் கற்றுத் தீரவேண்டிய ஆங்கிலமே ஏன் இந்தியாவின் பொது மொழியாக இருக்கக்கூடாது? இந்தியாவிற்கு என்று தனியாக ஒரு பொதுமொழி ஏன்? அதற்காகக் காலத்தையும், கருத்தை யும், பொருளையும் ஏன் வீணாக்கிக்கொண்டிருக்க வேண்டும்? ஆங்கிலத்துக்காகச் செலவிடப்படும் காலமும், கருத்தும், பொருளும் அகில உலகத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியத் துணைக் கண்டத்திற்கும் சேர்த்துப் பயன்படுவனவாகுமே! தமிழகத்திலுள்ள முக்கியமான அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும், பெருவணிகர்களுந்தான் பிறநாடுகளோடு தொடர்புகொள்ள வேண்டியவர்களாக இருப்பார்கள். அவர் கள் எப்படியும் ஆங்கிலம் கற்றுத்தீரவேண்டிவர்களாக இருக்கப் போகிறார்கள். அதுபோலவே வடநாட்டிலுள்ள முக்கியமான வர்களும், ஆங்கிலம் சுற்றுத்தீர வேண்டியவர்களாக இருக்கப்